இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்த விஷேட சொற்பொழிவு..

Written By avathani Media Network on Thursday, February 2, 2017



(ஜுனைட்.எம்.பஹ்த்)


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில், எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கான சொற்பொழிவு, 7ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு 'முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம்: முக்கியமான பிரச்சினைகளும் அதன் தாக்கமும்' எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது .

இலக்கம் 77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, இவ்விகராம் தொடர்பில் நீண்ட கால அனுபவமும் அறிவும் மிக்க, ஐக்கிய அறபு ராச்சிய அமீரின் தனியார் பகுதி முன்னாள் ஆலோசகரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான மாஸ் யூஸுப் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருவதோடு, , இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பேசுபொருளாகவுள்ள விடயம் தொடர்பில் இடம்பெறவுள்ள இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகளுக்கு- 076 3324456
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.