'அழகிய தொனியில் அதானை ஒலிக்கச் செய்வோம்' எனும் இஸ்லாமிய சன்மார்க்க பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு.

Written By avathani Media Network on Wednesday, February 1, 2017

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

'அழகிய தொனியில் அதானை ஒலிக்கச் செய்வோம்' எனும் இஸ்லாமிய சன்மார்க்க பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு நேற்று(28) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.றசாக், ஏ.எல்.தவம், நிந்தவூர் பாத்திமா பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் சங்கைக்குரிய உலமா அல்ஹாபிழ் அலி அஹமத் றசாதி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் பலரும், பொது மக்களும் இதில் கலந்து கொண்டனர்.

'அழகிய குரலில் அதானாய் (பாங்கோசையை) எவ்வாறு ஒலிக்கச் செய்வதென்ற முறைமையை சங்கைக்குரிய உலமாக்களான ரசீட் மௌலவி, இஸ்ஸாக் மௌலவி ஆகியோர்களால் ஆரம்பப் பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'பெஸ் புக்களில் மற்றவர்களைக் குறை கூறி எழுதுபவர்கள், இவ்வாறான சமூக விடயங்களையும், சமூகத்தை எவ்வாறு முன்னுக்குக் கொண்டு செல்லலாம் போன்ற விடயங்களை எழுதுமாறு கேட்டுக் கொள்கின்றேன்' எனத் தெரிவித்தார்.

அமைச்சர் றவூப் ஹக்கீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'கடந்த ஆட்சிக் காலத்தில் அதானை ஒலிபெருக்கிகள் மூலம் சொல்வதில் ஒரு நீதிமன்றத் தடை நமக்கிருந்தது. அப்போது முழு முஸ்லிம் சமூகமும் கிழந்தெழுந்தனர். இதற்கு ஏட்டிக்குப் போட்டியாக மாற்றுச்சமூகங்களிலுள்ள தீவிரவாதிகள் இதனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, மிகப் பெரியதொரு அரசியல் சர்ச்சையாக உருவெடுக்கச் செய்தனர் என்பதும், இவற்றை ஒரு வகையாகப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்குள்ளே தீவிரவாதம் இருக்கிறது, அதற்கான பயிற்சிகளும் அடிக்கடி நடைபெறுகிறது என்றெல்லாம் புரளிகளைக் கிழப்பி விட்டனர். ஆனால் அவ்வாறான நிலைமைகள் ஓரளவுக்கு இன்றில்லை' எனத் தெரிவித்தார்.










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.