"அட்சோ" (ADSSO) அமைப்பின் ஏற்பாட்டில் வேலையில்லா பட்டதாரிகளுக்கான கருத்தரங்கு

Written By avathani Media Network on Wednesday, February 1, 2017

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பான ‘அட்சோ’ (ADSSO) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனைத் தொகுதியில் வசிக்கும் வேலைவாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகளின் தகவல்களைத் திரட்டும் முகமாக இடம்பெற்ற கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை (28) காலை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.அமைப்பின் தலைவரும் பிரபல வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரியினால் பட்டதாரிகளுக்கு வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

ஏனைய தொகுதிகளில் இக்கருத்தரங்கு வெகு விரைவில் நடத்தப்படுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைப்பின் தலைவர் பட்டதாரிகளுக்கு விளக்கமளிப்பதையும் ஏராளமான கல்முனைத் தொகுதிவாழ் பட்டதாரிகள் கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.