(NFGG ஊடகப்பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியி(NFGG)னால் முன்னெடுக்கப்பட்டு வரும்பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வு கடந்த03.01.17 அன்று பிற்பகல் 4 மணிக்கு காங்கயனோடை அல்-அக்சா வித்தியாலயமண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
NFGGயின் காங்கயனோடை செயற்குழு உறுப்பினர் சகோதரர் சிராஜ் மௌலவிஅவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர்பொறியியலாளர் MM.அப்துர்ரஹ்மான் ,தலைமைத்துவ ஆலோசனை சபை உறுப்பினர்MACM. ஜவாஹிர் ஆசிரியர்,NFGGயின் தேசிய ஆலோசனை சபை செயலாளர் MBM.பிர்தௌஸ் நளீமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் காங்கயனோடையைச் சேர்ந்த சுமார் 500 க்குமதிகாமானமாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது. இவ்விஷேடநிகழ்வில் NFGGயின் சிரேஷ்ட உறுப்பினர்களான MAM பைஸர், A அஸ்ரப் அலி, MMஅன்சார் , UL றபீக், M றபாய்தீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான MM இல்யாஸ்ஆசிரியர், ABM நசீர் , ULM அஸ்மி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன்NFGGயின் மகளிர் அணி உறுப்பினர்கள், பெருமளவான பெற்றோர்கள்ஊர்ப்பிரமுகர்கள் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.














