வெள்ள அனர்த்த மாணவர்களுக்கு முஸ்லிம் எய்ட் அப்பியாசப் புத்தகங்களுடன் சப்பாத்து, பாடசாலைப் பைகள் வினியோகம்

Written By avathani Media Network on Thursday, January 5, 2017



கொலன்னாவ பிரதேசத்தில் ஆகக் கூடிய பாதிப்புகளைச் சந்தித்த வெள்ளம்பிட்டி பகுதியின் பல்வேறு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலைப் பை மற்றும் சப்பாத்துகள் அடங்கிய 187 பொதிகளை முஸ்லிம் எய்ட் நிறுவனத்தால் வழங்கிவைக்கப்பட்டது .

முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் 'மீள்த்திரும்புவோம் பாடசாலைக்கு' என்ற நிகழ்சிச்சித் திட்டத்தின் இறுதிக்கட்ட வினியோகம் இதுவாகும். இத்துடன் சேர்த்து மொத்தமாக 1250 பொதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை இங்கு நினைவு கூரத்தக்கது பொருத்தமான நேரத்தில் இந்நிவாரண உதவி கிடைக்கப்பெற்றதை இட்டு பெற்றோர்கள் தமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டனர்

(அஸீம் கிலாப்தீன் )











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.