கிழக்கில் மழை

Written By avathani Media Network on Wednesday, January 25, 2017

(Mohamed Nizous)

கொங்ரீட் பாதைகள்
குளமாக மாற
எங்கும் வெள்ளமாகி
ஏறும் வீட்டுக்குள்.

உசத்திக் கட்டுங்கண்ணு
உங்களுக்குச் சொன்னேனே
அசத்தல் கேள்விகளால்
அம்மணி அரிக்கும்.

கார்பட்டைச் சுற்றி
கபேர்ட்டுக்கு மேல் வைக்க
தோள் பட்டை கொழுகி
தொந்தரவு கொடுக்கும்.

முக நூலில் liveகள்
முண்டியடித்து வரும்
வகை வகையாய் கொமண்ட்ஸ்கள்
வசை பாடும் சில.

அரசியல் வாதிக்கு
அர்ச்சனை நடக்கும்
ஒரு சில இடங்களில்
கர்ஜனை எழும்பும்

உடைந்த குடைகள்
ஊர்வலம் போகும்
அடைந்த ஊத்தைகள்
அசிங்கமாய் மாறும்.

காணை வெட்ட வேண்டும்
கடலுக்கு ஓட்ட வேண்டும்
ஆணைகளும் ஐடியாவும்
அடுக்கடுக்காய் வரும்.

இரண்டு மூன்று நாளில்
இம்மழை நிற்கும்
அரண்டு போய் சொன்னதெல்லாம்
அப்படியே மறையும்...!

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.