RAM Publication நிறுவனத்தின் வெளியீடான 'நெற் நியூஸ்' எனும் மாத சஞ்சிகையின் முதல் வெளியீடு கடந்த வெள்ளிக்கிமை (27.01.2017) அன்று காத்தான்குடியில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
மாற்றுத் திறனாளியாக இருந்தும் தன்னால் முடியும் என்பதை நிருபித்து நூலுக்கான பக்கவடிவமைப்பையும் செய்து நண்பர்களின் உதவியோடு அதனை வெளியிட்டு வைத்தார் Razan Graphics உரிமையாளர் றசான் அவர்கள்.
சஞ்சிகை வெளியீட்டு விழாவிற்கு பல முக்கியமான பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தும் எதிர்பார்த்தவர்கள் பலர் வராத நிலையில் அதில் கலந்து கொள்ள முடியாமல் போன பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து தனது பிரதிநிதியை அனுப்பி தனக்கான சிறப்புப் பிரதியினைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
நேற்று மாலை நெற் நியூஸ் பத்திரிகைக் கரியாலயத்திற்கு நேரடியாக விஜயம் செய்த பொறியியலாளர் அப்துர் றஹ்மான் மேலும் சில பிரதிகளை ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன் எதிர்காலத்தில் இச்சஞ்சிகை வெளியீட்டிற்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.
பொறியியலாளர் அப்துர் ரஹ்மானின் வருகை தனக்கு மகழ்ச்சியூட்டுவதாகவும் அவரது வார்த்தைகள் தனக்கு நமபிக்கையூட்டுவதாகவும் நெற் நியூஸ் ஆசிரியர் றசான் நன்றியோடு தெரிவித்தார்.

