அரசியல் (ச)விதிகள்

Written By avathani Media Network on Saturday, January 28, 2017


(Mohamed Nizous)

கூட்டத்தைக் கூட்டியோ
குழியை வெட்டியோ
ஆட்டையைப் போட்டோ
ஆட்சியைப் பிடி

பணத்தை நீட்டியோ
பதவியைக் காட்டியோ
இனத்தை இழுத்தோ
எப்படியோ வெல்

காசு மழை பொழியும்
தேசமெங்கும் தங்கம்
ஆசை வார்த்தை கூறு
கூசாமல் பொய் சொல்

பள்ளிக்கும் போ
பன்சலைக்கும் போ
வள்ளியையும் வணங்கு
அள்ளி எடு வோட்டு

இருக்கின்ற ஆட்சியிலே
கருப்பாட்டைக் கண்டுபிடி
நெருக்கடி கொடு
நினைத்ததைச் செய்

உள்ளாட்சி பிழை என்று
நல்லாட்சி கொண்டு வா
தள்ளாடி வந்த பின்னால்
பொல்லாட்சி செய்.

யார் ஆள வந்தாலும்
இந்த விதி மாறாது
பாராளு மன்றத்தில்
பக்கம் மட்டும் மாறும்...!
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.