உடல்

Written By avathani Media Network on Tuesday, January 31, 2017

(Mohamed Nizous)

கலங்களால் கட்டப்பட்ட 
பழங்கால இயந்திரம்

ஐனூற்றெழுபத்தாறு MP
ஹை டெக் கமெரா
கண்ணில் இருந்து
கண்காணிப்பு செய்யும்

ஒரு மில்லியன் GB
உயர் தர மெமறியுடன்
உருவான மூளை
குருவாய் வழி நடத்தும்.

6பில்லியன் DNA baseகளின்
அதி நவீன தொழினுட்பம்
அப்பிளுக்கும் அன்றொய்டுக்கும்
அப்பன் வித்தை காட்டும்

7500 லீட்டர்
இரத்தத்தை தினமும்
ஓயாது பம்ப் பண்ணும்.
தேயாது இயங்குகின்ற
இதயமென்னும் இயந்திரம்

ஒரு லட்சம் கிலோமீட்டர்
ஓட்டை இல்லாக் குழாய்களில்
இரத்தம் ஓடும்
வருத்தம் நீங்கும்.

ஊற்றிய தேனீர்
உரமாய்ச் சுட்டதென்று
நூற்றிருபத்துனான்கு மைல் வேகத்தில்
மூளைக்கு செய்தி போகும்.

சூட்டை குளிராக்கி
குளிரை சூடாக்கி
ஓட்டமடிக் ACயாய்
உள்ளெடுக்கும் காற்றை மூக்கு.

ஆயிரக்கணக்கினிலே
அற்புதங்கள் உடலினிலே
மாய ஜாலை வித்தை காட்டும்
மனிதனை வாழ் வைக்கும்

அத்தனை வியப்பையும்
மொத்தமாய் வடிவமைத்த
வல்லவன் ஒருவனையே
அள்ளாஹ் என்கின்றோம்
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.