“முதலாவது அமர்வில் புதிய அரசியலமைப்பு குறித்த விவாதம்” : சபாநாயகர்

Written By avathani Media Network on Wednesday, January 4, 2017



இந்த வருடத்தின் முதலாவது சபைக் கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டார். 

இதன்படி 1வது சபை அமர்வு எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, தொடர்ந்து 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

புதிய வருடப் பிறப்பை முன்னிட்டு ஆசிர்வாதம் பெற மல்வத்துபீட அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்திக்க இன்று சென்றிந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.