நெட்நியூஸ்' மாத சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியீட்டு விழா ..

Written By avathani Media Network on Sunday, January 29, 2017



(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி "ரம்" வெளியீட்டுப் பணியகத்தினால் வெளியிடப்படும் 'நெட்நியூஸ்' மாத சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியீட்டு விழா காத்தான்குடி அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ. அகமதுலெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும் சஞ்சிகை ஆலோசகருமான ஜனாப் MLA. அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இச் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வர்த்தகர் நலன்புரிச் சங்கத் தலைவரும், சமூக சேவகருமான அல்ஹாஜ் K.L.M. கலீல் JP அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் முதல் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

பிரபல எழுத்தாளரும், புரவலருமான O.K. குணநாதன் அவர்கள் இவ்விழாவில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், சஞ்சிகையின் ஆய்வுரையையும் நிகழ்த்தினார்.

அத்தோடு "வார உரைகள்" பத்திரிகையின் பிரதம ஆசிரியர் M.I.றஹ்மதுல்லாஹ்(புவி) அவர்கள் இந் விழாவிற்கு சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன் சஞ்சிகையின் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

காத்தான்குடி FM MEDIA UNIT பணிப்பாளர் FM மஜீத், சஞ்சிகை ஆசிரியர் றஸான் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், இவ்வெளியீட்டு விழா நிகழ்வுகளை முஹாஸபா மீடியா நெட்வேர்க் பணிப்பாளரும், ஊடகவியலாளருமான ஜுனைத். எம். பஹத் தொகுத்து வழங்கினார்.

சஞ்சிகை ஆசிரியர் றஸான் ஜெளபர் அவர்களின் ஏற்புரையைத் தொடர்ந்து அதிதிகள் உள்ளிட்ட பலரும் ஆசிரியரிடமிருந்து சஞ்சிகைப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இச் சஞ்சிகையின் ஆசிரியர் சகோதரர் றஸான் ஜெளபர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது...











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.