பதுளையில் நடாத்தப்பட்ட மீலாத் விழா இடமாற்றம் செய்யப்பட்டதா..? குற்றச்சாட்டுக்கான தெளிவு

Written By avathani Media Network on Monday, January 2, 2017


(இக்பால் அலி)

பதுளை மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழாவை பதுளைக்கு திணிக்கப்பட்ட ரீதியாக கற்பிதம் பண்ணி பல குற்றச் சாட்டுக்களை முன்வைத்து சமூக வலைத்தலங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதிய மலையக முஸ்லிம் கவுன்சில் ஏ. எம். எம். முஸம்மில் எழுதிய கட்டுரைக்கு இது சமர்ப்பணமாகின்றது.

இது தொடர்பாக முஸ்லிம் சமயம் கலாசாரம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். எச். எம். ஸமீலுடன் கருத்தினைக் கேட்டறிந்த போது

பொதுவாக நாங்கள் தேசிய மீலாத் விழாவை அமைச்சர் அவர்களால் குறிப்பிடப்படும் மாவட்டத்திற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அந்த மாவட்டத்தை மையமாக வைத்து பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், அஹதிய்யாப் பாடசாலைகள் போன்ற அபிவிருத்திகளுக்காக 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2013 ஆம் ஆண்டு தான் இந்த இடத்திற்கு வந்தேன். அப்பொழுதும் 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த பத்து வருடங்களாக இதே வகையிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் 14 அல்லது 15 மில்லியன் ரூபா அளவுதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஏதோ ஒரு மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும். 2013 மொனாராகலை மாவட்டமும், 2014 ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டமும் 2015 கண்டி மாவவட்டமும் 2016 பதுளை மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டன. 

இம்முறை பதுளை மாவட்டத்துடன் நுவரெலியா மாவட்டமும் உள்ளடக்கப்பட்டிருந்து. இதற்காக வழக்கம் போன்று 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது . ஒதுக்கப்பட்ட நிதி யாவும் முழுமையாக இரு மாவட்டங்களுக்கும் பகிhந்தளிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் மார்ச் அளவில் வேலைகளை ஆரம்பித்து பள்ளிவாசல்கள், பிரதேச செயலகங்கள் தொடர்பு கொண்டு இன்று வரை 12.75 மில்லின் செலவுக்கான காசோலைகளை எழுதி அனுப்பிவிட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்தும் செலவு முடிந்து விடும். இந்த வேலைத் திட்டங்கள் முழுமையாக கட்டிட நிர்மாணப் பணிகளுக்க மட்டுமல்ல அவர்கள் கட்டிடப் பொருட்களை கடைகளில் வாங்குவதற்கான வழி வகைகளையும் செய்துகொடுத்துள்ளோம். இது திணைக்களத்தினால் நடத்தப்படுகிறது. இது என்னுடைய நான்கு வருட சேவையின் அடிப்படையில் கடந்த வருடமும் இவ்வருடமும் முற்று முழுதான பயனை கண்டிருக்கின்றோம். 2013, 2014 ஆகிய இரு ஆண்டுகளில் இந்த நிதி பூரணமாகப் பயன்படுத்தப்பட வில்லை. 2013 ஆண்டும் நிதி பெரிளயவிலான நிதி மிகுதியாகி மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் சென்றது. 2014 ஆம் ஆண்டு அதே மாதரி நடந்தது. களுத்துறை மாவட்டத்தில் சில வேலைகள் முடியாத பட்சத்தில் அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ள முடியாமை அந்தப் பணம் மீளவும் திறைசேரிக்கு திரும்பிச் சென்றது. ஏனென்றால் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் காசோலை எழுத முடியாமையினால் அந்தப் பணம் திரும்பிச் சென்றது. 2015 ஆம் முழுமையாக நாங்கள் பயன்படுத்தினோம், இம்முறையும் முழுமையாக கட்டத்தை நாங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் குறிப்பிடக் கூடியதாக நுவரெலியா மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை இரண்டு மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்து விட்டோம். அந்த இரண்டு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களையும் சனத்தொகையையும் கருத்திற் கொண்டே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்கள் ஆகியவற்றுக்கு மொத்தமாக 67 இடங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். அவை மட்டுமல்ல ஏனைய அமைச்சுக்கள் மூலமாகவும் கெபினட் பத்திர அனுமதியைப் பெற்று தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் ஹலீம் முயற்சி செய்தார்கள். அதற்கான அனுமதி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை மையமாக வைத்து சகல அமைச்சின் ஊடாகவும் உதவியைப் பெற்றுக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த வகையில் விழாவின் போது அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் பள்ளிவாசல்களுக்கும் மற்றும் மத்ஸாக்களுக்கும் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இது தவிர நிறைய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நான் கண்ட தேசிய மீலாத் விழாவில் இது ஒரு மாற்றமான விழாவாகும்.

மாவட்ட வரலாற்று ரீதியிலான நூல்கள் மறைந்த அறிஞர் எஸ். எச். எம். ஜெமீலுக்குப் பிற்பாடு நூல்கள் வெளிக்கொணரப்படவில்லை. இம்முறை அவற்றை வெளிக்கொணருவதற்காக அதற்கென குழுவினை நியமித்து முயற்சிகனை மேற்கொண்டோம். அவர்கள் அதனை பூரணமாக முடித்துத்தராமையினாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் ஆய்வு ரீதியிலான நூல் வடிவம் தயார் நிலையில் இருக்கிறது. எனினும் அதுவும் இன்னுமொரு தகுதி வாய்ந்த குழுவினரின் மேற்பார்வையின் பின்னரே அதனை வெளிக் கொணர வேண்டும். திணைக்களத்தினால் வெளியிடப்படும் நூல் சரியானதாகவும் நிரூபிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். எனவே சரியான வரலாற்று ஆதாரங்களுடன் தகுதியவாய்ந்தவர்களின் மேற்பார்வையின் பின்னர் வெளியிடத் தயாராக இருக்கின்றோம். கடந்த பல வருடங்களாக இவ்வாறானதொரு நூல்கள் வெளிக் கொணரப்பட வில்லை. ஏற்கெனவே எமது திணைக்களம் வெளியிட்ட நூல்களைத் தேடி எடுத்து தற்போது பத்திரமாக எடுத்து வைத்துள்ளேன்.

அதேவேளை இவ்விழாவில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க மிக நெருக்கடியான கால கட்டத்திலேதான் வருகை தந்தார். இந்த சந்தர்ப்பத்தில் ததிகிஸ்தான் ஜனாதிபதி நாட்டுக்கு வந்திருந்தார். அவருடைய நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இதன் காரணமாக நிகழ்வை இரு நிகழ்வுகளாக மாற்றி நடத்தினோம் முஸ்லிம்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்ற வகையில் காலையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் அங்கு முஸ்லிம்கள் பற்றி ஆற்றிய உரையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக உத்தரவாதம் தந்து உரையாற்றினார். இது வந்து மிக முக்கியனமான விடயம். 

தேசிய விழா நடத்தும் போது நாங்கள் நான்கு மதத்தைச் சார்ந்த சமய குருமார்களின் உரைகள் வழக்கம் போன்று நிகழ்ச்சி நிரலில் போடுவோம். கிறிஸ்தவம், இந்து முஸ்லிம் பௌத்த சமய மதகுருமார்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். ஆனால் இந்நிகழ்வு இரு பிரிவுகளாக இடம்பெற்றதால் காலையில் இந்து சமய மத குரு வருகை தந்து விட்டு போய் விட்டார். பௌத்த மதகுமார்கள் அன்று போயா தினம் காரணமாக வர முடியாது என அறிவித்திருந்தார்கள். அதனால் இரு சமய மதகுருமார்கள் தான் உரையாற்றினர் ஒருவர் இஸ்லாமிய மதகுரு, கிறிஸ்தவ மதகுரு.

இவ்விழா தொடர்பாக ஆரம்பக் கூட்டம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது. இதிலுள்ள வரப்பிரகாசங்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பயனாளிகளின் முழு முயற்சியும் பங்களிப்பும் இருத்தல் வேண்டும். கடந்த வருடம் ஆர்வத்துடன் நடவடிக்கையை மேற்கொண்டமையினால் நிதியை 100 விகிதம் பூரணப்படுத்தினோம். இம்முறையும் எல்லோரும் பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தி அவ்விடத்தில் கூறினேன்.

அதே போன்று கூடுதலான நிதி ஒதுக்கீடு வெலிமடைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நவம்பர் மாதம் அளவில் குருத்தலாவ பிரதேச செயலகத்திற்கு நேரடியாகச் சென்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினோம். அங்கு இருந்த அனைத்து பள்ளிவாசல் ஆவணங்களையும் பரிசீலனை செய்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுத்து விட்டு இம்மாதத்திற்குள் சகல நிதிகளையும் பகிர்ந்தளித்து விடுமாறு வேண்டிக் கொண்டோம். அப்போது செயலாளர் செய்வதாக உறுதியளித்தார். அவர் கூறியபடி செய்தும் முடித்துள்ளார். ஆனால் ஒரு பள்ளியைத் தவிர. காரணம் அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் முயற்சியில்லாமையாகும.; 

இந்த மீலாத் விழா 36 வது மீலாத் விழாவாகும். மர்ஹும் அமைச்சர் அஷ்ரப் நடத்திய விழா ஒரு புதியமாற்றத்திற்கான விழாவாகும் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்தார். அவர் அமைச்சினால் நடத்தப்பட்ட மீலாத் விழாவாகும். ஆனால் இது திணைக்களத்தினால் நடத்தப்பட்ட விழாவாகும். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தேசிய மீலா விழா குழுக்கான தலைவரும் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சரின் பதுளை மாவட்ட இணைப்பாளருமான அஷ்ஷெய்க் சீ. எம். எஸ். அப்துல் லத்தீப் கருத்து தெரிவிக்கையில்

இம்முறையில் நடைபெற்ற மீலாத் விழாவைப் பொறுத்தவரை அதன் சிறப்பம்சம் என்னவென்றால் கடந்த பத்து வருடங்களாக மெற்கொள்ளப்படாத விடயங்கள் பேசப்படக் கூடியதாக உள்ளன. இது மறைந்த மர்ஹும் அமைச்சர் எம். எச். எம் முஹம்மத் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் மறைந்த அஷ்ரப்பின் காலத்தில் தான் குறிப்பாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளுடன் மேற்கொள்ளப்பட்டவை எனவும் புதிய மாற்றங்கள் பெற்றவை எனவும் எல்லோரும் அறிந்த விடயமாகும். ஆனாலும் கடந்த பத்து வருடங்களுக்கு அவ்வாறு மாற்றம் எவையும் நடைபெறவில்லை. ஆனால் அமைச்சர் ஹலீம் முஸ்லிம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சராக வந்த பிற்பாடு புதியதொரு மாற்றம் கண்டுள்ளது. அமைச்சரவையில் கெபினட் அனுமதியைப் பெற்றதன் பிற்பாடு அமைச்சர் சஜீத் பெரேமதாசவினால் மீலாத் எழுச்சிக் கிராமம் ஒன்றை அமைப்புதற்கு இடம் ஒன்றை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதே போன்று இவ்வாறு ஒவ்வொரு அமைச்சிக்களின் ஊடாக வரப்பிரகாசங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் 14 மில்லியன் நிதி ஒதுக்கீடு தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் ஒரு கூட்டத்துடன் நிகழ்வு முடிவடைந்து விடும். புதிய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியேற்றதுடன் முதல் மீலாத் விழாவை கண்டியில் நடத்தப்பட்டது. அதற்குப் பின் இவ்வாறு மீலாத் விழாவொன்றை நடத்துவதில் எந்தவிதமான அர்த்தமுமில்லை. இதனை உயிரோட்டமுள்ள அபிவிருத்தி பணிகளைக் கொண்ட விழாவாக எடுக்க வேண்டும் என அமைச்சர் ஹலீம் தீர்மானம் எடுத்தார்.

இந்த மீலாத் விழாவை வேறு இடங்களில் வைப்பதற்காக பல அமைச்சர்கள் எங்கள் அமைச்சரிடம் பல அமைச்சர்கள் பல கோரிக்கையை முன் வைத்தார்கள். ஆனாலும் அமைச்சர் கட்டாயமாக பதுளையில் தான் நடத்தப்பட வேண்டும். பதுளைக்கு எவ்விதமான அபிவிருத்திப் பணிகளும் செல்வதில்லை. பதுளைக்கு கொடுப்பதுதான் என நியாயம் என அமைச்சர் தீர்மானம் எடுத்தார். அதற்குப் பிற்பாடு குறித்த தொகையை வைத்துக் கொண்டு எவையும் செய்ய முடியாது. அமைச்சுக்களின் உதவியைப் பெற்றுக் கொள்வற்காக திட்டத்தை தீட்டி அமைச்சரவையில் கெபினட் பத்திரத்தை தாக்கல் செய்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார். பாதை, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் பங்களிப்பு வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதற்காக தாம் உடன் தயாராக இருப்பதாக அமைச்சர் சஜீத் சம்மதம் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமர வீர அதற்கான இடத்தைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். 

வீடமைப்புக் கடன் உதவிகள் தற்போது 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 150 பேருக்கு தலா மூன்று இலட்சம் ரூபா விகிதம் வரை வழங்கப்படவுள்ளது.

லங்கம பாசல ஹொந்தம பாசல வேலைத் திட்டத்தின் கீழ் ஊவாவிலுள்ள ஒரே ஒரு தேசிய பாடசாலையான குறுத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரி உள்வாங்கப்பட்டு அபிவிருத்திப் பணிகளுக்காக ஏழு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக மூன்று புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒன்று குறுத்தலாவையிலிருந்து கொழும்புக்கும் போகாகும்புரவிலிருந்து குறுத்தலாவ ஊடாக பண்டாரவளைக்கும் மற்றையது சில்மியாபுரவிலிருந்து நுவரெலியாவுக்கும் இந்த பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவற்றிற்கும் மேலாக சில்மியாபுரவில் தாய் சேய் மருத்து நிலையம் அமைப்பதற்கு பங்களிப்பு நல்குவதாக சுகாதார அமைச்சர் உறுதி மொழி பகிர்ந்துள்ளார்.

இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட வேண்டும். அதாவது பதுளை மாவட்டத்தின் முஸ்லிம் கல்வி கலாசார முன்னேற்றத்திற்காகவும் சகல உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும் வெலிமடைத் தேர்தல் தொகுதியில் திஹாரியில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்திற்குச்; சொந்தமான 4 ஏக்கர் காணியை சகாய விலை அடிப்படையில் 90 இலட்சம் ரூபா விலைக்கு வாங்குவதற்கு முறைப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். இவை எல்லாம் முறைப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். இது வந்து வக்பு செய்யப்பட்ட காணியுமல்ல.

அதேபோன்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திரா பண்டாரநாயக்க விதவைப் பெண்களுக்கு தையல் மிசின் இயந்திரங்கள் வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார். சமூக சேவை அமைச்சினால் மூச்சக்கர நாற்காலி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். பொதுவாக விளையாட்டுத் துறை அமைச்சு உள்ளிட்ட அனைத்து அமைச்சுக்களும் ஒரு பகுதிப் பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். எனவே இந்த உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் உரியவர்களுக்கு வழங்கி வைக்கத் தயாராக இருக்கின்றோம்.

எனவே வெறுமனே அரசியல் சுய இலாபத்திற்காகவும் காழ்புணர்ச்சிக்காகவும் முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெறும் வரப்பிரகாசங்களை உண்மைத் தன்மையை அறியாமல் விமர்சிப்பது உவப்பான விடயமல்ல. எந்தவிதமான வரப்பிரகாசங்களும் கிடைக்காமல் இருந்த மாவட்டத்திற்கு கிடைக்காமற் செய்யும் காரண காரியங்களை விட்டு விடுமாறு வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் கருத்துத் தெரிவிக்கையில்

எங்களுக்கென தனியானதொரு அரசியல் கலசாரம் ஒன்று இருக்கிறது. என்னுடைய மாமா அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீட் 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து அரசியல் செய்தவர். அதேபோன்று நான் 1988 ஆம் ஆண்டில் இருந்து அரசியல் செய்து வருபவன். எட்டுத் தேர்தல்களை வென்றவன். அரசியல் இலாப நோக்கத்திற்காகவோ என்னுடைய சுய நலத்திற்காகவோ தேசிய மீலாத் விழாவை பதுளையில் நடத்தவில்லை . அங்கு நடத்த வேண்டும் என திணிக்கவும் இல்லை. நான் செய்தது அல்லாஹ்வுதஆலாவுக்காகும். நாங்கள் நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல. அரசியலுக்காக பெயரும் புகழும் எனக்குத் தேவை இல்லை. செய்த சேவைகள் பற்றி பெரியளவில் பத்திரிகையில் விளம்பரப்படுத்த எங்களுக்குத் தேவை இல்லை. இரு இரண்டு ஆண்டுகளுக்குள் நாம் என்ன செய்தோம் என்று அல்லாஹ்வுக்கும் மக்களுக்கும் தெரியும். எம்மைக் காட்டி பெரும்பான்மையின மக்களின் எதிர்ப்பலைகளைத் தூண்டக் கூடியவன் நாங்களல்ல. குறித்த காலத்தில் நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை எமது அமைச்சின் அலுவலகத்திற்கு வந்து விமர்சிப்பவர்கள் வந்து பார்த்து அறிந்து கொள்ளலாம். இம்முறைதான் வரலாற்றில் முதற் தடவையாக முத்திரையும் வெளியிட்டுள்ளோம்.

இதில் முக்கிய விடயம் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் வருகையாகும். முஸ்லிம்களுடைய சமகாலப்பிரச்சினைக்கு அக்கறை செலுத்தி உரையாற்றிய விடயம் சுட்டிக்காட்டபட வேண்டியது. அது மட்டுமல்ல மௌலவி ஆசிரியர்களுக்கான நியமனம் உள்ளிட்ட முஸ்லிம்களின் நலன்சார் விடயங்களுக்கு பெறுமதிமிக்க புறந்தள்ள முடியாத பிரதமரின் உரை அங்கு எம்மை கௌரவப்படுத்தக் கூடியவை. இதுவே உண்மையாகும்.










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.