(அஸ்லம் எஸ்.மௌலானா)
லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்கா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஊடக செயலமர்வு எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு (ஜனவரி 28, 29) ஆகிய இரு தினங்களில் காலை 9.00மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஆரோகியம் மிக்க இளம் ஊடக சமூகத்தை உருவாக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் பத்திரிகைத் துறை, வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் செய்தியாளராகவும், அறிவிப்பாளாராவும் இணைந்து சாதிக்கத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு அத்துறையில் பயிற்சியளிக்கும் நோக்கில் இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக லக்ஸ்டோ அமைப்பின் தலைவர் மருதூர் அன்சார் தெரிவித்தார்.
இச்செயலமர்வில் க.பொ.த.(சா.த/ உ.த) மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்ள முடியும் எனவும் இச்செயலமர்வில் கலந்து கொண்டமைக்கான பாரட்டும் சான்றிதழ்களும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ”கிழக்குச்சீமையிலே” எனும் கலாசார விழாவின்போது வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதுவரை பதிவு செய்யாதவர்கள் 0779322797 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
இச்செயலமர்வுக்கு சீ.பீ.எஸ்.ஸ்ரீ லங்கா, நாபீர் பௌண்டேஷன், மெட்ரோ மிரர், சமவெளி ஆகிய அமைப்புகள் அனுசரணை வழங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

