கல்முனை மாநகர சபையில் புது வருட கடமை ஆரம்ப நிகழ்வு!

Written By avathani Media Network on Monday, January 2, 2017

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அரசாங்க சுற்று நிருபத்தின் பிரகாரம் புதிய ஆண்டில் அரச ஊழியர்கள், கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கல்முனை மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் கணக்காளர் ஏ.சி.தஸ்தீக், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாநகர ஆணையாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு, நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் ஊழியர்கள் அனைவரும் கூட்டாக உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆணையாளரின் புது வருட பிரமாண அறிவுரை இடம்பெற்றது. 

அதன் பின்னர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புது வருட பிரமாண உரையை ஊழியர்கள் அனைவரும் செவிமடுத்தனர்.  




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.