பிராந்திய இனங்களின் ஐக்கியம் அடைவுகளுக்கான அத்திவாரம்!

Written By avathani Media Network on Monday, January 9, 2017

அண்மையில் காத்தான்குடியில் இடம் பெற்ற ஒஸா அமைப்பினது கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் அதன் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை உரையாற்றும் போது

ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக, உயிர் நாடியாக கருதப்படுவதும் மதிக்கப்படுவதும் அந்த சமூகத்தின் மாணவர் கல்வி என்றால் அதில் மிகையேதும் கிடையாது. ஒரு சமூகம் கல்வியில் பின்தங்கிவிட்டது என்றால் அந்த சமூகம் மனித சமுதாயத்தின் சமாந்திரத்தன்மையில் இருந்தும் தாழ் நிலைக்குச் சென்றுவிட்டது என்றே நாம் கூறலாம்.

மனித குல வழிகாட்டியான புனித இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளைப்போன்றே கல்வித்துறைக்கு மிகவும் அதிகபட்சமான முக்கியத்துவத்தையும் உந்துதலையும் வழங்குகிறது. புனித வேதமாகிய அல் குர்ஆனில் முதன்முதலாக இறக்கியருளப்பட்ட வேத வசனமும் கல்வியின் அவசியப்பாட்டையும் அதன் இன்றியமையாத்தன்மையையும் விளக்கி நிற்கிறது.

இன்று நாம் பார்க்கிறோம், அதிகமான இடங்களில் திறமையான மாணவர்களின் கல்வியுரிமைகள் கற்றல் செயற்பாடுகள் பலதரப்பட்ட பௌதீக காரணிகளால் இடைநடுவில் நின்றுவிடுவதை நாம் காணலாம். பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் வறுமை நிலை அந்த குடும்பத்திலுள்ள இளம் சிறார்களுடைய கல்வியில் தாக்கம் செலுத்துவது நாமெல்லோரும் நன்கறிந்த விடயமே..

இந்த வறுமை என்னும் சூழ்நிலையானது சமய, சமூக வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களாகப் பிறந்த அனைவரிடத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு விடயமாகும். அதன் காரணமாகத்தான் நாம் எந்தவொரு சமூக, மனிதநேய சேவையை முன்னெடுத்தாலும் அதில் வறுமை ஒழிப்பு என்ற தாரக மந்திரத்தை தண்டுவடமாக வைத்தே மேற்கொள்கிறோம்.மாறாக சமய எல்லையை மாத்திரம் இலக்காக கொள்வதில்லை

அந்த வகையில்தான் இவ்வருடமும் மாணவர் கல்வியை மேம்படுத்தும் நன்னோக்கில் இந்த உதவியை தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு மேற்கொள்வதற்கு நாம் முன்வந்தோம். இது சமய, சமூக எல்லைக்கோடுகளைக் கடந்த ஒரு மனிதநேயப்பணியாகும். இனங்கள் ஒன்றுபடுகின்ற அத்திவாரத்தை இளம்பராயத்திலயே இடவேண்டும் இதன்மூலமே எதிர்காலத்தில் பிராந்தியம் பிரகாசிக்கும் இதற்காகவே வேறுபாடுகள் இல்லாமல். எல்லாமாணவர்களையும் கூட ஒன்றாக அமரச்செய்திருக்கிறோம்.
மட்டுமல்லாது யார் யார் இந்த உதவித்திட்டத்திற்கு முழுத்தகுதியும் உரிமையும் உடையோர் என்பதை, இறைகூலியை மாத்திரம் இலக்காக கொண்டு மிகத்துல்லியமாக நேரடியாக மதிப்பீடு செய்து அவ்வாறானவர்களுக்கே நாம் இந்த சேவையினை வழங்குவதற்கும் முன்வந்துள்ளோம். இது எமது ஓஸா அமைப்பின் பிரதான அடிப்படைத்தன்மையில் மிகவும் முக்கியமான ஒரு சிறப்பியல்பாகும்.
அது மாத்திரமல்லாது

ஆழமான ஆய்வறிவுள்ள சமய சமூக முக்கியஸ்தர்களின் ஆலோசனகளயும் மிகவும் உள்வாங்கி செயல்பட்டுவருடகின்றோம் ஆதேபோன்று எமது செயற்பாடுகளில் கனிசமானது தமிழ்,முஸ்லிம்களை இணைத்துக் கொண்டவையாக இருப்பதனைக்காணலாம் மாத்திரமல்லாது சமூகத்தில் கனிசமான அரசியல் தரப்பினரையும் உள்வாங்கியதாக எமது அரங்கு அமைக்கப்படுவதும் எமது முதன்மையான முன்மாதிரியாகும் .

எமது செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்குகின்ற தனவந்தர்களுக்கும் எமது மனப்பூவமான நன்றிகள் என இல்மி அஹமட் லெவ்வை மேலும் குறிப்பிட்டார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.