BCAS மட்டக்களப்பு வளாகத்தின் சாதனையாளர் கௌரவிப்பு.

Written By avathani Media Network on Wednesday, January 11, 2017


(பைஸர் அமான்) 

2016ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தர மாணவர்களாக 
(Rank 1st
பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 6 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று 11.01.2017 BCAS மட்டக்களப்பு வளாகத்தில் அதன் முகாமையாளர் எஸ்.எச். மிர்ஸான் அவர்களின் தலைமையில் BCAS வளாகத்தில் நடைபெற்றது. 

இதன்போது பொறியியல், மருத்துவம், முகாமைத்துவம், சட்டத்துறை, உயிர் முறைமை தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பம் போன்ற துறைகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்தரத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களான முறையே.. 

செல்வன் நாகேந்திரன் கிருத்திகன், 

செல்வி முகம்மட் ஜிப்ரி பாத்திமா றிஸ்மா,

செல்வன் சரிப்தீன் அப்துல் றகுமான்,

செல்வி சந்திரகுமார் ஷர்மிளா,

செல்வி இல்யாஸ் பாத்திமா அறூசா,

செல்வன் அன்சார் முகம்மட் அம்ரித் ஆகியோர் அவரவர்களின் பெற்றோருடன் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு BCAS வளாகத்தின் பிரதான கற்கை நெறிகளில் ஒன்றான சுமார் 400 மணித்தியாலங்களைக் கொண்ட 4 மாதகால முழுநேர கற்கை நெறியான ACCESS (English + IT கற்கை நெறியினை 100% கட்டணக் கழிவுடன் மாணவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய அனுமதிப் பத்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

மாவட்டத்தின் முதல்தர மாணவர்கள் 6 பேரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து நடாத்தப்பட்ட முதல் கௌரவிப்பு நிகழ்வு இது என்றும் மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே அறிமுகம் செய்து கொள்ளும் நிகழ்வாக இது அமைந்திருந்ததாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தகவலும் படமும் : பைஸர் அமான். 












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.