இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடியில் மாபெரும் இரத்ததான முகாம் சுதந்திரதினத்தன்று

Written By avathani Media Network on Tuesday, January 31, 2017

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கையின் திரு நாட்டின் 69வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையும்,காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின வைபவமும், மாபெரும் இரத்ததான முகாமும் எதிர்வரும் பெபர்வரி மாதம் 4ம் திகதி சுதந்திரதினத்தன்று காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

'உதிரம் கொடுப்போம் உயிர் உயிர்காப்போம்' எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ள மேற்படி மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாமில் பெண்களுக்கு தனியாகவும்,ஆண்களுக்கு தனியாகவும் இடம்பெறவுள்ளதால் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கி ஒரு உயிரை காப்பாற்ற விரும்புகின்ற அனைத்து சகோதர,சகோதரிகளையும் இவ் இரத்ததான முகாமில் கலந்து கொள்ளுமாறு காத்தான்குடி நகர சபையும்,காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றமும் இணைந்து வேண்டுகோள் விடுக்கின்றது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.