பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு

Written By avathani Media Network on Tuesday, January 10, 2017

(பானகமுவ நிருபர்)

இம்முறை வெளியாகியுள்ள 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கான பெறுபெறுகளின் அடிப்படையில் பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் பதினான்கு மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 13 பேர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விரிவுரையாளர் கலாநிதி அம்ஜத் ராசிக் தெரிவித்தார்

இதில் இரண்டு மாணவர்கள் 3 ஏ சித்திகளையும் 2 ஏ, 1 பி சித்திகளை மூன்று மாணவர்களும் 2 ஏ, 1 சி சித்திகளை ஏழு மாணவர்களும் 2 ஏ, 1 எஸ். சித்திகளை ஒரு மாணவனும், 1 ஏ, 1 பி, 1 சி சித்திகளை ஒரு மாணவனும் 2 பி.1 சி சித்திகளை இரண்டு மாணவர்களும் 1 ஏ, 1பி, 1 எஸ் சித்திகளை ஒரு மாணவனும் பெற்றுள்ளனர். எம் என். நாஸீர், மற்றும் ஏ. ஆர். எம். பாயிஸ் ஆகிய மாணவர்களே மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.