MSW-சமூக நலன் பேணும் அமைப்பினால் 650 வறிய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் கல்வி வேலைத் திட்டம் ஆரம்பம்-படங்கள்.

Written By avathani Media Network on Friday, December 30, 2016

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும் (Movement For Social Wellness) எனும் சமூக நலன் பேணும் அமைப்பினால் காத்தான்குடி,மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 15 பாடசாலைகளில் கல்வி பயிலும் 650 வறிய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் கல்வி வேலைத் திட்டத்தின் கீழ் மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா வித்தியாலய மாணவ, மாணவிகளுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 30-12-2016 இன்று வெள்ளிக்கிழமை மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

ஹூஸைனியா வித்தியாலய அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.பாயிஸ் (இஸ்லாஹி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஹூஸைனியா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பாடசாலை மாணவ,மாணவிகள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஹூஸைனியா வித்தியாலயத்திலுள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் அதிபர்,ஆசிரியர்களினால் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த சமூக நலன் பேணும் அமைப்பு குறுகிய காலத்தில் சுகாதாரம்,கல்வி ரீதியான பல்வேறு மனித நேய சமூகப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.