FM MEDIA UNIT இனது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..

Written By avathani Media Network on Wednesday, December 21, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி FM MEDIA UNIT இனால் நடாத்தப்பட்ட தரம் 05 புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு 18.12.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி WIMBLEDONமண்டபத்தில் இடம்பெற்றது.

உளவளத்துணையாளர் திரு.S.சிறீதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் MACM பதுர்தீன் ( JP) அவர்களும் FM MEDIA UNIT இயக்குனர் சபை உறுப்பினர் கலாநிதி N.ஜெகதாபரன் அவர்களும் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனார்.

இந் நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், அதிதிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது..










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.