இலவச உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

Written By avathani Media Network on Monday, December 26, 2016

(S.சஜீத்)

இவ் ஆண்டு கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை (GCE O/L) எழுதி முடித்த மாணவர்களுக்கான இலவச உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு (24/12/ 2016) சனிக்கிழமையன்று காத்தான்குடி மட்/மம/அல் ஹிறா வித்தியாலத்தில் பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி மாணவர்கள் இணைந்து மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசப்படுத்துவதற்கு ஆரம்பித்துள்ள (TEAM) எனும் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போது இவ்வருடம் சாதாரண தரப்பரீட்சை எழுதிவிட்டு உயர்கல்வியினை தொடரவுள்ள மாணவர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இணைந்து பாடத்தை தொடரவுள்ள மாணவர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் குறித்த அமைப்பினர் கல்வி வழிகாட்டல் தொடர்பான பல இலவச கருத்தரங்குகளை எமது பிரதேசங்களில் நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.