இரு சிறு நீரகங்களும் செயல் இழந்த மாணவனுக்கு அல்லாஹ்வுக்காக உதவுங்கள்

Written By avathani Media Network on Monday, November 28, 2016

பேருவளை இக்ரா கல்லூரியில் மின்னியல் பிரிவில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலு மாணவனும் 124 கண்டி வீதி பறகஹதெனிய என்னும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட 17 வயதுடைய ஏ. எம் முஹம்து ஹம்ஸல் என்ற மாணவனின் இரு சிறு நீரகங்களும் செயல் இழுந்து கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக இருபது இலட்சம் ரூபா செலவாகும் என கண்டி போதனா வைத்தியசாலையின் சிறு நீரக விசேட நிபுணத்துவ வைத்தியதிகாரி ஏ. டப்லியு. ஏம் வஸீல் தெரிவித்துள்ளார்.

இவரது தந்தை அப்துல் முனாப் சாதாரண தொழில் புரிபவர். எனவே இம்மாணவனின் சத்திர சிகிச்சைக்காக இவரின் பெற்றோர்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். முயுமான நிதி உதவியை வழங்குமாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

என். பீ. ஏ. முனாப்

கணக்கு இலக்கம்;- 199200123230868

மக்கள் வங்கி

கிளை மாவத்தகம

தொலைபேசி இலக்கம் 0778393929 -0372297560

(இக்பால் அலி)







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.