புத்தளம் நுரைச்சோலையில் விசேட பயான் நிகழ்வு

Written By avathani Media Network on Friday, November 25, 2016

(எம். எஸ். எம். ஸாகிர்)

அல் - ஜாமிஉல் முனவர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம், ஜமியத்து தஃவதிஸ் ஸலபியா, புத்தளம் பிராந்திய தஃவாக்குழு ஆகிய இணைந்து எதிர்வரும் (27) ஞாயிற்றுக்கிழமை புத்தளம் நுரைச்சோலை அரபாநகர் கொய்யாவாடியில் அமைந்துள்ள அல் ஜாமிஉல் முனவர் ஜும்ஆ மஸ்ஜிதில் விசேட பயான் நிகழ்வொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில், பெண்களுக்காக, பி.ப. 4.00 மணி முதல் 5.45 வரை “குழந்தைகளின் இலட்சியப் பயணம்” எனும் தலைப்பிலும்,ஆண்களுக்காக, இஷாத் தொழுகையைத் தொடர்ந்து இரவு 9.30வரை “ஆசையே துன்பத்துக்குக் காரணம்” எனும் தலைப்பிலும் சன்மார்க்கப் போதகரான மௌலவி அஷ்ஷெய்க் அப்துல் ஹமீட் (ஷரயி)யினால் உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து விளங்கி அதன் வழியில் செயல்பட அனைத்து ஆண்களும் பெண்களும் இந்நிகழ்வில் கலந்து பயன் பெறுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.