உலமாக்கள் சார்பாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Written By avathani Media Network on Tuesday, November 8, 2016

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

'மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வி;ற்கு நன்றி செலுத்த மாட்டான்'

நபிமார்களின் வாரிசுகளான உலமாக்களை கண்ணியப்படுத்துவதிலிலும், எந்த பிரதேசவாதமும், வேறுபாடுகளும் பாராது, அவர்களின் எதிர்கால நலன்களில் கூடிய கவனம் செலுத்துவதில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் பணி மகத்தானது என அஷ்ஷெய் அல்ஹாபிழ் எம்.கே.கே.அஹமட்(றஷாதி) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்......
இலங்கை வரலாற்றில் முஸ்லிம் உம்மாவுக்காக உழைத்த பல அரசியல் தலைமைகளையும் அவர்கள் ஆற்றிய பணிகளையும் நாம் வரலாறுகளில் படிக்கமுடிகின்றது. அவைகள் யாவும் வரலாற்றுப் பதிவாகவே உள்ளன. அதே போன்று  
உலமாக்களின் எதிர்கால இலக்கை மாத்திரம் நோக்கமாக கொண்டு உலமாக்களுக்கான தனியான பல்கலை கழகம் ஒன்றினை உருவாக்கி அதனூடாக உலமாக்களின் உயர்கல்விக்கு வித்திட்டது மாத்திரமின்றி உலமாக்கள் தொழில்நுட்ப ரீதியான துறையில் தங்களின் அறிவினை மேம்படுத்தி; கொள்ளவும், அதன் வளர்ச்சியில் முன்னேற வழிவகுத்து அதற்காக சிந்தித்து செயலாற்றிய பெருமை சகோதரர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுக்கே சொந்தமானது என தெரிவிப்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இஸ்லாத்தின் கடமையான ஹஜ் என்ற வணக்கத்தினை வசதி படைத்தவர்கள் மாத்திரமே நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாம் பணித்திருக்கின்றது. 
ஹஜ் என்ற வணக்கத்தினை நிறைவேற்ற வசதியில்லாதவர்கள் உம்றா கடமையினை நிறைவேற்றுவதனூடாக தாங்கள் மன ஆறுதலினையும்,ஆத்ம திருப்தியும் அடைவதினை காண்கின்றோம். 

ஆனால் அந்த உம்றா கடமையினைக் கூட செய்ய வசதியில்லாதவர்களின் விடயத்தில் நாம் கவலை அடைகின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ் அந்த விடயத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தனது உயரிய சிந்தனையூடாக இலங்கை பூராகவும் இருந்து இறையில்லங்களில்; பணியாற்றுகின்றஉலமாக்கள்,ஹதீப்மார்,இமாம்கள்,முஅத்தீன்கள்,அறபு மதரசாக்களின் ஆசிரியர்கள் ஆகியோர்களை புனித உம்றா கடமையினை நிறைவேற்றுவதற்றகாக வேண்டிய சகல ஏற்பாடுகளை செய்து கொடுத்தமையானது இலங்கை வரலாற்றில் இது சரித்திரமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

இம்மகத்தான பணிகளை உயரிய நோக்கத்துடன் அல்லாவிற்காக வேண்டி மாத்திரம் செய்துகொடுத்த(விசேடமாகஉலமாக்களுக்காக) இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு நாம் எமது நன்றிகளையும்,பாராட்டுக்களையும் உலமாக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.