பிடல் கெஸ்ட்ரோ

Written By avathani Media Network on Saturday, November 26, 2016

(Mohamed Nizous)

ஆறிலும் சாவு
நூறிலும் சாவென
ஊரில் உள்ளவர்கள்
உரைக்கும் போதெல்லாம்
நேராய் இவன் முகமே - இனி
நினைவுகளில் தோன்றும்

போட்டுத் தள்ளவென
புறப்பட்ட அமெரிக்க
கூட்டு நரிகளுக்கு
குறளி வித்தை காட்டியவன்.

முதலாளி சுரண்டலை
முதலாளாய் எதிர்த்தவன்
வதை செய்ய வந்தோரை
கதையையே முடித்தவன்

காவிகளின் தலைவனாய்
காட்சி தரும் ஆட்சியாளருள்
காவியத் தலைவனாய்
கண்ணியமாய் ஆண்டவன்.

உடல் மறைந்தாலும்
உயிர் பிரிந்தாலும்
பிடல் கெஸ்ட்ரொ எனும்
பெரு நாமம் மறையாது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.