வேற்றுமைக்கு அப்பால் ஒன்றுபடுவோம்…!

Written By avathani Media Network on Thursday, November 3, 2016



நல்லாட்சி நல்லாட்சி என நல்லாட்சியின் பங்காளிகளாகிய முஸ்லிம் சமூகத்துக்கு தற்போது நல்லாட்சியின் ஆசிர்வாதத்துடன் நடக்க போகும் சதித்திட்டங்களில் இருந்து இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்போம்.

ஒரு புறம் முஸ்லிம் பகுதிகளில் திடீர் என முளைக்கப்படும் புத்தர்சிலைகள், மறு புறம் முஸ்லிம்களின் தனியார்சட்டத்தில் கைவைப்பது, இன்னொரு புறம் வியாபரத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள வரிகள் என பல பாகத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுவதை நாம் அவதானிக்கிறோம்.

அன்மையில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அறிவிப்பில் நமது நாட்டுக்கு ஜரோப்பிய யூனியனால் வழங்கப்படுகிற GSP+ சலுகையை மீள் பெறுவதாக இருந்தால் ஜரோப்பிய யூனியனின் நிபந்தனைகளை பூர்த்திசெய்ய வேண்டிய நிலையில் இலங்கை இருப்பதாகவும், அந்த நிபந்தனைகளில் ஒன்றாக முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என அமைச்சரவை முடிவாக அன்மையில் அறிவித்திருப்பதானது பல சந்தேகங்களை முன் நின்நிறுத்துவதாவே உணர்த்தப்படுகிறது.

ஆனால் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையானது இவ்வாறு சொல்கிறது

"முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுமாறு கோரவில்லை திருமண வயதை 16 ஆக அதிகரிப்பதே நிபந்தனை என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி. வரிச் சலு­கையை பெற வேண்­டு­மானால் முஸ்லிம் தனியார் சட்­டத்தை இலங்கை அர­சாங்கம் மாற்ற வேண்டும் என நிபந்­தனை விதித்­துள்­ள­தாக வெளி­யான செய்­தி­களை கண்டு தாம் ஆச்­ச­ரியம் அடைந்­த­தாக இலங்­கைக்­கான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுவர் டங் மார்க் தெரி­வித்துள்ளார்.

சர்­வ­தேச சம­­யங்­க­ளுக்­க­மைய பெண்­களின் திரு­மண வயதை 16 ஆக மாற்ற வேண்டும் என்­பதே எமது நிபந்­த­னை­யாகும். தனியார் சட்­டத்தை மாற்­று­வதும் மாற்­றாமல் விடு­வதும் உங்­க­ளது உள்­ளக விட­ய­மாகும். அதில் நாம் ஒரு­போதும் தலை­யி­ட­மாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்."

முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில திருத்தங்களை (குர்ஆன்,சுன்னா) அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டியது முஸ்லிம்களிடம் உள்ள கருத்தாகும். அது தொடர்பில் முஸ்லிம் புத்திஜீவிகள் உட்பட பலதரப்பினரின் இது தொடர்பில் கருத்தாடல்கள் உட்பட பல முன்னெடுப்புகளை செய்துகொண்டு இருக்கும் தருவாயில்…

அரசாங்கத்தின் இந்த அமைச்சரவை பலசந்தேகங்களை உறுவாக்கியுள்ளது. இலங்கை முஸ்லிம்களின் தனியார் சட்டத்தின் திருத்தங்கள் மேற்கொள்வதாக இருந்தால் அது இலங்கை முஸ்லிம்களினால் (அல் குர்ஆன்,சுன்னா) அடிப்படையில் உள்வாங்கப்பட்டு அது மேற்கொள்ளப்பட வேண்டும்.

அது தொடர்பில் இலங்கை முஸ்லிம்களே தீர்மானங்களை எடுக்க வேண்டும். GSP+ சலுகை இலங்கை பெறுவதாக இருந்தால் அதற்காக முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை சாட்டி அமைச்சரவை அறிவிப்பானது பல சந்தேகங்களை முன்நிறுத்துகின்றது..

ஆகையால்…

எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாமல் ஐரோப்பிய யூனியனை திருப்திப் படுத்துவற்காக GSP+ வரிச் சலுகையை காரணம் காட்டி சிறுபான்மை முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் கை வைக்க முயலும் இலங்கை அரசை கண்டித்து எதிர்வரும் 03.11.2016 வியாழக் கிழமை முஸ்லிம்களின் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வார்ப்பாட்டத்தில் அனைத்து முஸ்லிம்களும் கலந்து கொள்வதின் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், இனிமேலும் முஸ்லிம் உரிமையில் அரசாங்கமோ வேறு எந்த இனவாத குழுக்களோ கை வைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்பதை நிரூபிப்பதற்காகவும், இவ்வார்ப்பாட்ட பேரணியில் பங்கெடுக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம் .

"நமது தனியார்சட்டத்தை நாமே பாதுகாப்போம்"

- முஹம்மட் பர்ஸாத்

காத்தான்குடி








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.