சணச சர்வதேச சிக்கன தின விழா நிகழ்வுகள் -பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதி

Written By avathani Media Network on Saturday, November 5, 2016

( ஏ.எல்.ஏ.றபிக் பிர்தௌஸ் )

இலங்கை சணச சம்மேளனமும், கல்முனை மாவட்ட சணச சமாசமும் இணைந்து 'சணச அங்கத்தவர் அனைவரையும்இலட்சாதிபதியாக்குவோம்' எனும் தொனிப் பொருளில் நடாத்திய சர்வதேச சிக்கன தின விழா நிகழ்வுகள் நேற்று சாய்ந்தமருது லீ மிறிடியன்ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை சணச சம்மேளனத் தலைவர் விஸ்வபிரசாதினி டொக்டர் பி.ஏ.கிரிவந்தெனிய தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சுகாதாரபிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன், கே.எம்.ஏ.றசாக், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்திஆணையாளர் வீ.திவாகர சர்மா, கல்முனை மாவட்ட சணச சமாசத் தலைவர் எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இவ்விழாவில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலுமுள்ள சணச சம்மேளனத்தின் ஆயிரக் கணக்கான முக்கிய உறுப்பினர்களும்,மூவின மக்களும் கலந்து கொண்டு, சிறப்பித்தமை ஒரு விசேட அம்சமாகக் காணப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் ஏ.எல்.ஏ.றபிக்பிர்தௌஸ் தெரிவிக்கிறார்.

மூவின மக்களின் கலை, கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கக் கூடிய கலை நிகழ்வுகள் பலவும் மேடையேற்றப்பட்டதோடு, கடந்த காலங்களில்சணச சம்மேளன வளர்ச்சிக்காகப் பாடுபட்டுழைத்தவர்களுக்குப் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள் வழங்கி, கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை அதிதிகளும், சனச தொண்டர்களால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள் வழங்கி, கௌரவிக்கப்பட்டனர்.

சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'மக்களின் பணத்தை மூலதனமாகக் கொண்டு செயற்பட்டு, அம்மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட எத்தனையோ அமைப்புக்களுள் இன்று சனச நிறுவனம்முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. எனவே காரணமானவர்களைப் பாராட்ட வேண்டும்' எனத் தெரிவித்தார்.















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.