கௌஸ் மாஸ்டரின் சீடரே பண்டித். அமரதேவ ..! - முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர்

Written By avathani Media Network on Friday, November 4, 2016



(எம்.எஸ்.எம். ஸாகிர்)

எமது நாட்டின் இசைத்துறையில் மாமேதையாகிய விளங்கிய பண்டித் டபிள்யூ. ஜி. அமரதேவ வின் மறைவையிட்டு முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் சார்பில் அதன் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமரதேவ ஆரம்பகாலத்தில் இந்தியப்பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று இலங்கை திரும்பியவர். அன்று தென்னிந்திய ஹிந்திப் பாடல்களைத் தழுவி சங்கீதம் படைத்தவர்களில் இலங்கையிலே பிரபலமாக விளங்கிய காலத்திலேதான் அமரதேவ இலங்கைக்கு விஜயம் செய்துசுதேசிய சங்கீத முறையை அறிமுகப்படுத்தி மிகவும் பிரபல்யமடைந்தமார்.

தேசிய கீதத்தை இயற்றிய ஆனந்த சமரக்கோன் பிற்காலத்தில் சுனில் சாந்த போன்றவர்களோடு சேர்ந்து இவர் இசைத்துறையில் ஆற்றிய பணி மகத்தானது.


அமரதேவ வுடைய சங்கீத ஆசானாக இருந்தவர் பிரபல இசையமைப்பாளரான முஹம்மத் கௌஸ் மாஸ்டர் என்பவர். அசோக்க மாலா எனும் சினிமாவில் பாடியது மூலமாகத்தான் அமரதேவ பிரபல்யம் அடைந்ததாக சென்ற வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்த போது கூறினார். பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க முதல் இன்றுள்ள அமைச்சர்களுடைய மரியாதைக்கும் பாத்திரமான ஒரு தேசிய பாடகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இலங்கையில் யாருக்கும் கிடைக்காத பத்மபூஷண விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்தியாவில் பிரபல்யமடைந்திருந்த சைகால், முஹம்மட் ராபி போன்றவர்களுடைய சமகாலத்து இசைத்துறை ஜாம்பவானாக விளங்கினார். இந்தியாவின் பிரபல தலைவர்கள்,இசையமைப்பாளர்கள், சினிமா இயக்குனருடைய பெரும் மதிப்புக்கும் பெரும் மரியாதைக்கும் உரியவராக விளங்கினார். இவருடைய மறைவை இட்டு முஸ்லிம் முற்போக்கு முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. என்றும் தெரிவித்தார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.