தவ்ஹீத் ஜமாஅத், புழுதிவயல் கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி

Written By avathani Media Network on Saturday, November 5, 2016

(எம்.எஸ். முஹம்மது)

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) – புழுதிவயல் கிளை சார்பாக கடந்த 2016.11.04 ஆம் திகதி வெள்ளிக் கிழமை அன்று மஃரிப் தொழுகையின் பின்ன மார்க்க விளக்க நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் மௌலவி MHM ரிஷாப் MISc அவர்கள் “இதுதான் இஸ்லாம்” எனும் தலைப்பில் பாரம்பரிய முஸ்லிம்களால் இஸ்லாம் தவறாக புரிப்பட்டுள்ளதையும் உண்மையான இஸ்லாத்தை எதன் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய துனைத் தலைவரும் அழைப்பு இஸ்லாமிய மாத இதழின் பிரதம ஆசியருமான மௌலவி MTM பர்ஸான் அவர்கள் “இலங்கையில் ஷீயாக்களின் ஊடுவல்” எனும் தலைப்பில் ஷீயாக்களின் உருவாக்கம், அவர்களின் வளர்ச்சி, இலங்கையில் அவர்களின் ஊடுருவல், இலங்கையில் அவர்களின் பிரச்சாரம் மற்றும் இலங்கையில் அவர்களுடன் தொடர்பு பட்ட இயக்கங்கள் போன்ற பல தகவல்களை புகைப்பட (Photo) , வீடியோ (Video) ஆதாரங்களுடன் மிகவும் தெளிவாக விளக்கினார்.

இந் நிகழ்வில் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.