ரிஸ்வி ஜவஹர்ஷாவினால் முன் வைக்கப்பட்ட குறை நிரப்புப் பிரேரணை ஏகமானதாக நிறைவேற்றம்

Written By avathani Media Network on Wednesday, November 2, 2016

(இக்பால் அலி)

வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவினால் குருநாகல் மாவட்டத்தில் காபட் இடும் புனர்நிர்மாணப் பணிகளுக்காக மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 340.2 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளும் வகையில் முன் வைக்கப்பட்ட குறை நிரப்புப் பிரேரணை இன்று 01-11-2016 முதலாம் திகதி சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதத்திற்கு பின்னர் எந்த எதிர்ப்புமின்றி ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்தக் குறை நிரப்புப் பிரேரணையை குருநாகல் மாவட்ட மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள் என்பது முக்கிய அம்சமாகும்.

இந்த நிதி ஒதுக்கீடு குருநாகல் மாவட்டத்திலுள்ள மூன்று வீதிகளை புனர் நிர்மாணம் செய்வதற்காக நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாகாண அமைச்சின் ஊடாக அந்த நிதியைப் பெற்று இதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்ப்படவுள்ளது. இந்த குறைநிரப்புப் பிரேரணை தோல்வியடையும் பட்சத்தில் காபட் வீதிகளுக்கான வேலைகள் தடைப்பட சந்தர்ப்பங்கள் உள்ளகதாகவும் தெரிவிக்கப்பட்டடிருந்தது. 

கடந்த மாதம் செப்படம்பர் இறுதியில் வடமேல் மாகாணத்திலுள்ள குளங்களை புனர் நிர்மாணம் செய்வதற்காக வடமேல் மாகாண அபிவிருத்தி உள் நாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சர் எஸ் பி. நாவின்னவினால் 480 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து வடமேல் மாகாண சபையில் குறை நிரப்புப் பிரேரணை முன்வைக்கப்பட்டு தோல்வி யடைந்தது என்பது முக்கியமான விடயமாகும். 

ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்களைத் தவிர ஏனைய கட்சிகளின் மாகாண சபை உறுப்பினர் ஆதரவு அளிக்காமையினால் முன்வைக்கப்பட்ட குறை நிரப்புப் பிரேரணை தோல்வியடைந்தது. இதனால் இம்மாவட்டத்திலுள்ள குளங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேலைத் திட்டங்கள் தடைப்பட்டுள்ளது.

இந்த நிலைமை அமைச்சர் ரவூப் ஹக்கிமினால் காபட் வீதிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தடைப்பட சாத்தியங்கள் உள்ளதாகவும் எதிர்ப்புக்கள் மக்கள் மத்தியில் நிலவின. இந்த வேலைத் திட்டம் தடைப்படும் பட்சத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தம் பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தார்கள். 

இந்த பிரேரணை சகல தரப்பினருடைய ஆதரவுடனும் ஏகமானதாக நிறைவேறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள், ஸ்ரீ சு. கட்சி , சரத்பென்சேகா கட்சி மாகாண சபை உறுப்பினர், மஹிந்த தரப்பு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஏகமானதாக ஆதரவு தெரிவித்துள்ளார்கள். எனினும் இந்த வாக்களிப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரநிதித்தவப்படுத்தும் சக மாகாண சபை உறுப்பினர் நியாஸ் சமூகமளிக்க வில்லை. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ள வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.