(முகமட் பாயிஸ் (பிரித்தானியா)
இலங்கையின் புதிய ஆட்சி மாற்றம் ஒன்று இடம் பெற்று ஒரு வருட பூர்த்தியாகி உள்ள நிலையில் அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது.
ஜனநாயகரீதியில் தெரிவான புதிய அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளிவீசியது இதன் அடிப்படையில் குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களை ஆட்சிப்பொறுப்ப பேற்றுசில தினங்களில் நடைமுறைக்கு கொண்டுவந்தது இதன்மூலம் நாட்டுமக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருந்தபோதிலும் அதுபெரிய அளவு சாத்தியப்படவில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும் .
கடந்த ஆட்சியாளர்களின் பல்வேறு மோசடிகள் மற்றும் மோசமான பொருளாதாரக்கொள்கைகள் சிறுபான்மை மக்கள்மீதான அடக்குமுறை ஜனநாயக விரோத செயற்பாடுகள்என்பன ஆட்சிமாற்றத்தின் தேவை ஒன்றை வேண்டிநின்றது .
யுத்தத்தால்பாதிக்கப்பட்டு உளவியல் ரீதியாக காயப்
பட்டுள்ள மக்களின் மனோநிலையில் பாரிய மாற்றம் ஒன்றின் தேவை எழுட்சியாகவும் நல்லாட்சி என்ற கோஷமாகவும் வெளிவந்தது இதுவே ஆட்சி மாற்றத்தை தீர்மானித்தது .
நாட்டு மக்களின் பிரச்சனைகளை கையாள்வதில் புதிய நல்லாட்சி அரசாங்கமும் தவறிவருவதாகவே மக்கள் கருதுவதை காணமுடிகிறது இதன் மூலம் மக்கள் நல்லாட்சியின் மீதிருந்த நம்பிக்கை படிப்பு படியாக குறைய ஆரம்பித்துள்ளது.
இதனை சாதமாகிக்கொள்ள கடந்த ஆட்சியாளர்கள் பெரும் பிரயத்தனம் எடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு சாதகமான சூழல் ஒன்றை அமெரிக்க தேர்தல் கள வெற்றி வலு வூட்டி இருக்கிறது
உலகத்திற்க்கு ஜனநாயகம் தொடர்பில் பாடம் எடுத்துவரும் பெரும் வல்லரசும் போலீஸ்காரருமான அமெரிக்காவில் வெளிப்படையாகவே இனவாதத்தை தூண்டி அதனை தனது கொள்கையாக பிரகதனப்படுத்தி வெற்றி பெற்றுள்ள ரொனால்டு ரம்ஸ் யின் இன ஒதுக்கல் கொள்கை பல நாடுகளின் அரசியலில் தாக்கம் செலுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை
கடந்த ஆட்சியாளர்களின் இனவாத செயற்பாடுகளின் மூலம் பெரும் பான்மை மக்களின் ஆதரவைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்செயல்களை தூண்டி மறைமுக இன ஒதுக்கல் கொள்கையை கையாள முனைந்ததன் விளைவாக தோல்வியை தழுவினர் இருந்தபோதிலும் இதனைக் கைவிடாது தொடர்ந்தும் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்கத் தேர்தலில் இடம்பெற்றுள்ள மாற்றம் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை
அமெரிக்கத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் கூட்டு எதிர்கட்சியினரின் பிரச்சாரங்கள் இனவாதத்தை வெளிப்படையாகக் கொண்டதாக இருப்பதை அவதானிக்கமுடிகிறது .
பத்திரிகையாளர் மகாநாடொன்றில் கருத்துத் தெரிவித்துள்ள கெளதபாய ராஜபாக்ஷ பெரும்பான்மை சமூகம் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை அமெரிக்க தேர்தல் நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

