ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி மத்திய குழு நடாத்திய கௌரவிப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வுகள்

Written By avathani Media Network on Saturday, November 5, 2016

(எம் எச் எம் அன்வர்) 

ஒரு பிரதேசத்தில் அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் மற்றும் இணைப்பாளர்கள் அவசியம் இருக்க வேண்டும் அப்போதுதான் அப்பிரதேசம் முன்னேறும்

இவ்வாறு நேற்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற மட்டு மாவட்ட ஐ தே கட்சி அமைப்பாளர் திரு வி மகேஸ்வரன் மாவட்ட இணைப்பாளர் எம் எஸ் எம் ஷாபி மற்றும் உம்ரா கடமைக்கு செல்லவுள்ள முன்னாள் வாரஉரைகல் ஆசிரியர் பூவி ரஹ்மதுல்லாவை வழியனுப்பும் நிகழ்வின்போது இணைப்பாளர் எம் எஸ் எம் ஷாபி தெரிவித்தார்

அவர் தெடர்ந்தும் உரையாற்றுகையில் 

நான் முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அகமட்லெவ்வை அவர்களின் பாசறையில் வளர்ந்தவன் எனக்கு அரசியலைப்பற்றி நன்கு தெரியும் அவர் சிறி லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக இருக்கும்போது 300க்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள் பல உயர் நியமனங்கள் மாகாண சபைத்தேர்தல் பாராளுமன்ற தேர்தல் போன்ற பல தேர்தல்களை சந்தித்து வெற்றியடையச் செய்துமுள்ளோம்; பலரை வீட்டுக்கும் அனுப்பியுள்ளோம் பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்துள்ளோம்

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதற்கிணங்க எல்லோரும் தேவை என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் ஐ தே கட்சி இணைப்பாளர் பதவியூடாக பல வேலைத்திட்டங்களை செய்யவுள்ளோம் 

ஐ தே கட்சியின் ஆரம்ப கால போராளிகளை நான் இங்கு காண்கின்றேன் எங்களிடம் இந்த அமைப்பாளர் மற்றும் இணைப்பாளர் பதவிகள் உயர்பீடத்தால் திணிக்கப்பட்டுள்ளன பல்பு போடுவதற்கும் பள்ளிவாயல்களுக்கு பிட்டிசன் அடிப்பதற்கும் இப்பதவியை பயன்படுத்தமாட்டோம் பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்கள் நிறையவே செய்யவேண்டியுள்ளது 

அண்மையில் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் ஆற்றிய குப்பை கொட்டுவது தொடர்பான உரையை பாராட்டுவதுடன் எல்லோரும் தேவை எல்லா கட்சிகளும் தேவை என்ற அடிப்படையில் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வோம் என அவரது உரையில் தெரிவித்தார் 

மேற்படி நிகழ்வுக்கு ஆரம்ப ஐ தே கட்சி உறுப்பினரகளான கே எம் அலியார் எம் கையூம் ஆசிரியர் எம் ஐ மனாப் மௌலவி ஹமீட் பொலிஸ் கன்ட்ரெக்டர் ரஸாக் மஹ்றூப் ஹாஐpயார் உட்பட பலர் கலந்துகொண்டனர் 









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.