பிஸ்மி கின்டர்காடனின் கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 2016 - படங்கள்

Written By avathani Media Network on Wednesday, November 16, 2016

எமது பிஸ்மி கின்டர்காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கடந்த 21.10.2016 வெள்ளிக்க்கிழமை அன்று மாலை 2.௦௦ மணி முதல் 06.30 மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. பிஸ்மி கின்டர்காடனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக BCAS நிறுவனத்தின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி உட்பட பிஸ்மி குழுமத்தின் பணிப்பாளர்கள் ,உறுப்பினர்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பிஸ்மி கின்டர்காடன் மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் கிராஅத், பிஸ்மி கீதம், தேசிய கீதம் , தமிழ்ப் பாடல், சிங்களப்பாடல் ஆங்கிலப்பாடல், பிஸ்மி குட்டீஸ், ஆங்கில மொழியிலான அறிவுக்களஞ்சியம், நீரின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல், ஊடகங்களும் சிறுவர்களும் எனும் தலைப்பிலான சிறுவர் மாநாடு, பெற்றோரின் சிறப்பு குறித்த நாடகம், பாட்டுக்குப்பாட்டு, சிறுவர் உரிமைகள் தொடர்பான விவாத அரங்கு, சாதனையின் சிகரங்கள் எனும் இஸ்லாமிய பெண் ஆளுமைகளின் அறிமுக நிகழ்வு போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வின் இறுதியில் பிஸ்மி கின்டர்காடனின் பாடநெறியைப் பூர்த்தி செய்த பாலர்களுக்கும் கற்பித்த ஆசிரியைகளுக்கும் அதிதிகளினால் சான்றிதழும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு பற்றி கருத்துரைத்த அதிதிகள் பாலர்களின் நிகழ்வுகள் வழமையான பாலர் பாடசாலை நிகழ்வுகளை விட வித்தியாசமாக வடிவமைக்கப் பட்டிருந்ததாகவும் நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய கலை கலாசாரம் பிரதிபலித்ததாகவும் அமைந்திருந்தன எனவும் குறிப்பிட்டனர்.






















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.