அரசை கண்டித்து 03.11.2016 அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் SLTJ நடத்திய அவசர செயற்குழு கூட்டம்

Written By avathani Media Network on Wednesday, November 2, 2016

GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து 03.11.2016 அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் SLTJ நடத்திய அவசர செயற்குழு (இன்று) 01.11.2016, கம்பொல – க்ரீன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் தலைவர் சகோ. R.M ரியால் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் “அவசர செயற்குழுவின் நோக்கம்” தொடர்பில் ஜமாஅத்தின் தலைவர் ஆரம்ப உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் “முஸ்லிம் தனியார் சட்டம் என்றால் என்ன?” என்பது பற்றியும், முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு மற்றும் GSP+ வரிச் சலுகை என்றால் என்ன? அதனால் நாட்டுக்கு என்ன பயன் கிடைக்கும்? GSP + வரிச் சலுகைக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கும் எவ்வித காரணமும் இன்றி அரசாங்கம் முடிச்சுப் போடுவது ஏன்? போன்ற விபரங்களை தனியார் சட்ட விதிமுறைகள் மற்றும் மார்க்க நிலைபாடுகளை ஒப்பிட்டு விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து “உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்” என்கிற தலைப்பில் ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக நமது முன்னோர்கள் செய்த தியாகங்கள், போராட்டங்கள் மற்றும் முஸ்லிம் தனியார் சட்ட வரலாறு போன்றவற்றை தெளிவு படுத்தியதுடன், 03.11.2016 அன்று தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமளித்து உரையாற்றினார்.

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரீஸா யூசுப் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.