குவைத்தில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இலங்கை சகோதரியின்ஜனாஸா நல்லடக்கத்திற்க்கு உதவிய TNTJ & SLTJ

Written By avathani Media Network on Friday, October 28, 2016

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் குவைத் சால்மியா பகுதியில்உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது.

அந்த குடியிருப்பில் வசித்து வந்த இலங்கை களுத்துறை மாவட்டம்பாணதுறை, தொட்டவத்தை பகுதியை சேர்ந்த பாத்திமா ஜோஹரா(வயது_54) என்பவர் விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்து போய்அடுத்து என்ன செய்வது என அறியாமல் தவித்து நின்றஇறந்தவரின் ஊரை சேர்ந்த சகோதரிகள் சிலர்...

நம் கொள்கை சகோதரர் மூலம்#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்_குவைத்_மண்டல_நிர்வாகத்தைதொடர்பு கொண்டு உதவிகள் கோரினர்.

உடனே களம் இறங்கிய மண்டல நிர்வாகம் சகோதரர்முத்துப்பேட்டை சமீர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தஅன்வர், நாசர், ரிஸ்வான் ஆகீயோர் அடங்கிய ஒரு குழுவைஅமைத்து பணியை முடுக்கி விட்டது. 

இச்சம்பவம் தீ விபத்து சம்பந்தப்பட்ட சிக்கலான விசயம்என்பதால் நீண்ட நெடிய சட்ட போராட்டத்துக்கு பின் ஜனாசாவைஅடக்குவதற்குண்டான சட்டரீதியான அனைத்து வேலைகளையும்இன்று (28-10-2016) செய்து முடித்தது. 

இன்சாஅல்லாஹ் ஜனாஸா நாளை 29.10.2016 மாலை அசர்தொழுகைக்கு பிறகு குவைத் சுலைபிகாத் மைய வாடியில்நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குவைத் வாழ் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் வந்து ஜனாசாதொழுகையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

தகவல்.


கூத்தாநல்லூர் ஜின்னா, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

குவைத் மண்டலம்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.