புள்ளி விபரங்கள் தெரியாமலும் , அரசியல் தொடர்பான அடிப்படை அறிவு அற்றவகையிலும் NFGG யினை விமர்சிப்பது சிறுபிள்ளைதனமானது.

Written By avathani Media Network on Friday, October 7, 2016






(புள்ளி விபரங்கள் தெரியாமலும் , அரசியல் தொடர்பான அடிப்படை அறிவு அற்றவகையிலும் NFGG யினை விமர்சிப்பது சிறுபிள்ளைதனமானது. 




நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆதரவாளர் ஒருவரின் பதில்.....)






அண்மையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் பின்வரும் இணைப்பில் உள்ளவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.




// இதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து அவர்கள் இனாமாக கொடுத்த சீட்டுக்களை தக்க வைத்துக்கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக சொன்ன கருத்துக்களுக்குகூட எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார்கள். ஆனால் நாங்கள் ஒருபோதும் அவ்வாறு இருக்க மாட்டோம். //



வடமாகணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் செய்த ஒப்பந்தம் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு போனஸ் ஆசனம் வழங்கியிருந்தாலும் மக்களுக்கு பாதகம் தரக்கூடிய விடயங்கள் வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவற்றை NFGG a எதிர்த்ததனை சகோதரர் சிப்லி பாருக் மறந்து விட்டு பேசக் கூடாது.



வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள்,சமீபத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி “முஸ்லிம்களை தமிழர்களாக சித்தரிக்க முனையும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்தை ஏற்க முடியாது “ என பகிரங்கமாக தனது அறிக்கையினை பதிவு செய்திருந்தது. அதனை கீழ்வரும் இணைப்பின் மூலம் பார்வையிடலாம்.




இதற்கு மேலதிகமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரச்சார செயலாளர் சிறாஜ் மஷ்ஹூர் “ முஸ்லிம் மக்களின் சமத்துவமான அரசியல் இருப்பை மறுதலிப்பது ஏன்? “ எனும் தலைப்பில் விரிவான ஆக்கத்தினையும் எழுதியிருந்தார். அதனை கீழ்வரும் இணைப்பின் மூலம் பார்வையிடலாம்.




இன்னுமொரு விடயத்தினையும் இங்கு சுட்டிக் காட்டுகிறேன். 



வடக்கு மாகாணசபை அரசியல் அமைப்பின் மீதான ஆலோசனை முன்மொழிவுகளை அண்மையில் முன்வைத்திருந்தமை தெரிந்ததே. மேற்படி அரசியல் அமைப்பின் மீதான ஆலோசனைகளை அப்படியே ஏற்க முடியாது என தெரிவித்து , நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சார்பில் அதன் பிரதிநிதியும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய அ.அஸ்மின் அவர்கள்6 அம்சங்களை உள்ளடக்கிய முஸ்லிம் சமூகம் சார் ஆலோசனைகளையும், திருத்தங்களையும் முன்வைத்திருந்தார், மேற்படி ஆலோசனைகளை குறித்த பிரேரணையில் இணைத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் மாத்திரமே மேற்படி பிரேரணைக்கு தனது ஆதரவினை வழங்க முடியும் என்று தெரிவித்திருந்தார், எனினும் திருத்திய பதிப்பு உறுப்பினர்களின் பார்வைக்கு வழங்கப்படாமையினைத்தெடர்ந்து, தன்னுடைய ஆதரவினை மீளப்பெற்றுக் கொள்வதாக சபை அமர்வின் போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் சபையில் தெரிவித்தனை இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.



இந்த விடயத்தின் விரிவான விளக்கத்தினை பின்வரும் இணைப்பின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.



ஆனால், முஸ்லிம் சமூகத்திற்கு பாதகாமான இந்த பிரேரணைகளை உங்கள் கட்சியின் பிரதிநிதிகள் எதிர்க்கவுமில்லை , அதனை நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்பதனை மறந்து விட வேண்டாம்.



இவற்றை மறந்து நீங்கள் கருத்து தெரிவித்திருப்பதானது , நீங்கள் ஊடகங்களில் வரும் முக்கிய செய்திகளை கூட வாசிப்பதில்லையா? என்ற கேள்வியினை ஏற்படுத்துகிறது.



13 வது திருத்தச் சட்டம் ஊடாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது மத்திய அரசில் இருக்கும் அதிகாரங்களை குறைத்து மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வு செய்யவே என்கின்ற விடயம் நாம் அனைவரும் அறிந்ததே . கடந்த மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் தெரிவு செய்யப்பட்ட கையோடு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் “ “திவிநெகும” சட்ட மூலத்துக்கு ஒட்டு மொத்தமாக நீங்கள் ஆதரவளித்தனை மறந்து விட்டு அப்பட்டமாக பேசுவது நகைச்சுவையானது. இதற்காக கடந்த அரசால் ஆதரவளித்த அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகள் ஒவ்வொரு மாதமும் வளங்கப்பட்டதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த சட்ட மூலத்துக்கு எதிராக நீதி மன்றத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டிருந்ததனையும் அதன் பின்னரான சூழ்நிலையயும் யாவரும் அறிந்ததே , இந்த விடயங்களை தெரிந்திருந்தும் ஆதர்வளித்தமையானது ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் செய்த துரோகம் என்பதனை மறக்க வேண்டாம்.


அப்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கிழக்கு மாகாண சபை பிரதிநிதிகளுக்கு இதன் பாரதூரத்தினை விளக்கி கடிதம் எழுதியதனையும் நினைவு படுத்துகிறேன்.


// குறிப்பாக பாராளுமன்ற தேர்தலிலே எம்மோடு சேர்ந்து போட்டியிட்ட சகோதரர் 1100 வாக்குகளை மாத்திரமே மேலதிகமாக பெற்றிருந்தார். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே SLMC 38000 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியது. அந்த ஆசனத்தை SLMCஇழந்திருக்க வேண்டுமானால் அது 6500ற்கு மேற்பட்ட வாக்குகளை இழந்திருக்க வேண்டும். எனவே நாங்கள் இணையாது இருந்திருந்தால் SLMC க்கு ஆசனம் எதுவும் கிடைத்திருக்காது, SLMC தேசியப்பட்டியல் கொடுக்காமல் எங்களை ஏமாற்றி விட்டது என்பது போன்ற வெக்கக் கேடான கருத்துக்களை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். //




2010 இல் SLMC உம் UNP இணைந்து UNF ஆக களமிறங்கிய போது 22935 வாக்குகளை பெற்றுக் கொண்டது..

2012 இல் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் 23 083வாக்குகளை பெற்றுக் கொண்டது.

2015இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் SLMC + NFGG கூட்டமைப்பு 38477 வாக்குகளை பெற்றுக் கொண்டது.



இதில் மட்டக்களப்பில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் சுமார் 12500 விருப்பு வாகுகளை பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அண்ணளவாக முஸ்லிம் காங்கிரஸ் இன் வாக்குப் பலம் மட்டக்களப்பில் 23000 இலிருந்து 26000 வரை என்பதனை இறுதியாக இடம்பெற்ற மூன்று தேர்தல்களை வைத்து கணிப்பிட முடியும்..



நீங்கள் தனித்துக் கேட்டிருந்தால் 32000 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஆசனம் கிடைத்திருக்கும்.





இந்த விடயத்தினை சாதாரன கணித அறிவு உள்ள எவரும் விளங்கிக் கொள்வார்கள்.





தேர்தல் ஒப்பந்தமும் அதில் குறிப்பிடப் பட்டுள்ள விடயங்களும் முஸ்லிம் காங்கிரஸ் இனால் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை செய்யுமாறு கோருவது வெட்கக் கேடா அல்லது ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களை செய்யாமல் விடுவதும் அதற்கு ஆதரவாக செயற்படுவதும் வெட்கக் கேடா என்பது சுய புத்தி உள்ள அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய விடயமாகும். 



இவ்வாறு உண்மை இருக்க , சகோதரர் சிப்லி பாருக் தெரிவித்திருக்கும் கருத்தானது அவரது தேசிய அரசியல் மீதான குறுகிய பார்வையினையும் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையினையும் காட்டி நிற்கிறது.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.