NFGGயினால் அமைக்கப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

Written By avathani Media Network on Tuesday, October 18, 2016

(NFGG ஊடகப்ப்பிரிவு)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) சொந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட காத்தான்குடி- பாலமுனை CIG வீட்டுத்திட்ட வீதியானது மக்கள் பாவனைக்காக கடந்த 16.10.2016 அன்று கையளிக்கப்பட்டது.

மிக நீண்ட காலமாக மணல் வீதியாக காணப்பட்டு வந்த இவ்வீதியினூக பயணிப்பதில் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வந்த நிலையில், இவ்வீதியினை கிறவல் வீதியாக அமைத்து தருமாறு கோரி மனு ஒன்றினை அப்பகுதி மக்கள் NFGGயிடம் சமர்ப்பித்திருந்தனர். 

இம்மக்களின் பிரச்சனையினை நேரில் சென்று பார்வையிட்டNFGGயின் தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் இவ்வீதியினை அமைத்து தருவதற்கான உறுதி மொழியினை சில மாதங்களுக்கு முன்னால் வழங்கியிருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாத கால இடைவெளியில் அமைப்பட்ட இவ்வீதியானது தற்பொழுது மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

NFGGயின் பாலமுனை செயற்குழு உறுப்பினர் AM சியாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வீதியினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப்பிராந்திய ஆலோசனை சபை பொறுப்பாளர் MBM பிர்தௌஸ் நளீமி, மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி பிரதேச அமைப்பாளரான MHM.முஸ்தபா மற்றும் பாலமுனை பிரதேச பிரமுகர்களான சம்சுஸ் ஸலாஹ், புஹாரி நாநா ஆகியோரும், NFGGயின் கா.குடி பிராந்திய ஆலோசனை சபை உறுப்பினர்களான ஜவாத் ஆசிரியர், MYM. ஷரீப், UL றபீக், MAM பைசர், M றபாய்தீன், நஜ்மில், செயற்குழு உறுப்பினர்களான அலாவுத்தீன் , முகம்மட் லாபிர், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு பாலமுனை NFGG செயற்குழு உறுப்பினர்களான றிபாய்தீன் , நஜ்மில், அஸ்லம் , அப்துர் ரஹீம் உட்பட பிரதேச பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.