2016 ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பொத்துவில் பிரதேச சபையினால் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
2004ம் ஆண்டுமுதல் வருடம்தோறும் ஒக்டோபர் மாதத்தினை தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனம்செய்து பல்வேறுவகையான நிகழ்ச்சிகள், வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இம்முறை 2016ன் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பொத்துவில் பிரதேச சபையினால் பல நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதில் நூலகங்கள் சிரமதானம் உட்பட பாடசாலை மாணவர்களிடையே வாசிப்பு, அறிவுத்திறனை மேம்படுத்த போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி பரிசில்கள் வழங்கவும் நூலக வாசகர்களை அதிகரித்துக்கொள்ள இலவசமாக அங்கத்தவர்களை சேர்த்துக்கொள்ளவும் விழிப்புணர்வு ஊர்வலம், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள்போன்ற நடவடிக்கைகள்மூலம் வாசிப்பு மாதத்தினை சிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் இர்பான் தெரிவித்தார்.
-மரியமின் புத்திரன்

