குவைட் சென்று சட்டவிரோத மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது

Written By avathani Media Network on Sunday, October 9, 2016


குவைட்டில் சட்டவிரோத மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களும் ஒரு இந்தியரும் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அந்த நாட்டின் கெய்பான் பிரதேசத்தில் வாடகைக்கு பெற்றுக் கொண்ட வீடொன்றில் இவ்வாறு சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு இடம்பெற்றுள்ளது. 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலதிக விசாரணைகளின் போது, அவர்கள் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்தது மற்றும் அந்நாட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தேடப்பட்டு வந்த ஒருவரும் அடங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. 

இதுதவிர, குவைட், சபஹியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒன்றரை கிலோகிராம் கஞ்சாவுடன் இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் படி, மூன்று அதிகாரிகள் கஞ்சா வாங்குவது போன்று சென்று சந்தேகநபர்களை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளின் போது இவர்கள் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.