மீண்டும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக தில்ருக்‌ஷி

Written By avathani Media Network on Thursday, October 20, 2016

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

இவர் அண்மையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

இதனையடுத்து, நேற்றையதினம் அவரது இராஜினாமா ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையிலேயே அவருக்கு இப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடந்த பெப்ரவரி மாதம் பதவி ஏற்க முன்னதாக, தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


- AD
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.