(NFGG ஊடகப் பிரிவு)
ஓட்டமாவடி சாட்டோ விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிகெட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்விலும், பரிசளிப்பு விழாவிலும் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சாட்டோ விளையாட்டுக் கழகத்தின் 25 வருட நிறைவைக் குறிக்குமுகமாக கடின பந்து கிரிகட் சுற்றுப்போட்டி ஒன்றினை சாட்டோ விளையாட்டுக் கழகம் கடந்த சில வாரங்களாக ஓட்டமாவடி பிரதேசத்தில் நடாத்தி வந்தது. அதன் இறுதிப் போட்டி கடந்த 15.10.2016 அன்று ஓட்டமாவடி அமீரலி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விலேயே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சாட்டோ விளையாட்டுக் கழகத்தின் தலைவர் M.றியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் முன்னாள் தலைவர் SL. மன்சூர் உட்பட பிரதேசத்தின் பல பிரமுகர்களும் அதே போன்று NFGG யின் செயற்குழு உறுப்பினர்களான S.M. நழீம். S.அலாவுதீன் மற்றும் MCM. நியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் பங்கு பற்றிய நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. இதில் பங்கு பற்றிய றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்து உரையொன்றையும் ஆற்றினார்.










