(இக்பால் அலி)
இன்று சர்வதேச சிறுவனத்தை தினத்தைக் கொண்டாடும் மாணவர் சமூகத்திற்கு மத்தியில் நாடு பூராகவும் நீரின் பெறுமதி பற்றி உணர்த்த திட்டமிட்டுள்ளோம். நீரின் நண்பர் என்ற வேலைத் திட்டத்தின் கீழ் பாரிளயவிலான வேலைப் பணிகiளை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். இன்றைய காலத்தில் வாழும் அனைத்து மாணவர் சமூப் பரம்பரைக்கும் நீரின் பெறுமதி பற்றி உணர்த்தப்பட வேண்டும். எங்கள் நாட்டில் வசதி வாய்ப்பின்றி வாழலாம். மின்சாரம் இன்றி வாழலாம். வேறு எவ்வகையான தேவைகளின்றியும் வாழலாம். ஆனால் நீரின்றி வாழ முடியாது. நாங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீரைத்தான் பயன்படுத்துகின்றோம். தண்ணீரின் மூலம் அத்தியாவசியமான தேவைப்பாடுகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த தண்ணீரின் பெறுமதி தொடர்பாகவும் இதனைப் பராமரிப்பு தொடாபாகவும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுதல் அவசியமாகும் என்று நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கல் நகர திட்டமிடல் அமைச்சும் கல்வி அமைச்சும் மற்றும் மத்திய மகாண கல்வி அமைச்சும் இணநை;து நீரின் நண்பர் என்ற வேலைத் திட்டத்திற்கு இணங்க பாடசாலைகள் மாணவாகள் மத்தியில் நீரைப் பாதுகாத்துப் பயன்படுத்துதல் நீரைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் புதிய வேலைத் திட்டம் மத்திய மாகாண நீர் வழங்கல் மத்திய நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்
அவர் தொடர்ந்து பேசுகையில்
நீர் நண்பர்களுடைய இந்தப் புதிய அமைப்பு இன்று இருக்கின்ற மாணவர் மாணவியர் மத்தியில் தண்ணீரைப் பாதுகாப்பாக உபயோப்படுத்துகின்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ஒரு அங்கமாக நாங்கள் கல்வி அமைச்சியோடு சேர்ந்து இந்த ஏற்பாட்டை நாங்கள் செய்து இருக்கின்றோம். இந்த அமைப்பின் மூலம் சில இலக்குகளை அடைய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாங்கள் மாணவர் பருவத்தில் இருந்த காலத்தில் கேள்விப் படாத சுற்றாடல் பாதிப்புக் குறித்த நிறைய விசயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. வித்தியாசமான பாரிய அனர்த்தங்களுக்கு நாங்கள் முகம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். மிகப் பெரிய இயற்கை அழிவுகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றோம். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நாட்டைத் தாக்கிய போது அந்த சம்பவத்தை முதன் முதலாக நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். வெள்ளப் பெருக்கெடுப்பு மண் சரிவு போன்றவை எல்லாம் ஒரு வருடத்தில் ஓரிரு மாத இடைவெளியில் மிகப் பெரிய வெள்ளப் பெருக்கும் மிகப் பெரிய கடுமையான வரட்சியும் நீரில்லாத தன்மையும் காணப்படுகின்ற ஒரு அற்புதமான காலத்திலேயே நாங்கள் வாழுகின்றோம். இந்த நிலவரம் காணப்படுவதற்கான பின்னணியைத் தேடிப் பார்க்கின்ற போது நீரைப் பாதுகாப்பது நீர் நிலைகளைப் பேணுவது குறித்த சரியான புரிந்துணர்வு இல்லாமல் அபிவிருத்தி செய்வதல் அபிவிருத்தி நடவடிக்கைகளிலே இந்த விடயம் தொடர்பாக ஒழுங்கான ஒழுங்கான திட்டமிடல் இல்லாம விளைவுதான் இவ்வாறான அனர்த்தங்களுக்கு வலிகோலுகின்றது என்று சொல்லுமளவுக்கு இன்று கணிப்பிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி என்கின்ற விசயத்தில் எல்லா அரசாங்கங்களும் அதிதீவிரமாக செயற்பட்டாலும் சுற்றாடலைப் பாதுகாக்காமல் எதிர்காலப் பரம்பரையினருக்கு இயற்கையின் மிகப் பெரிய பரிசாக வனாந்திரங்கள் காடுகள் வனப்புமிக்க மலைகள், நீர் நிலைகள் ஆறுகள் ஆகிய இவற்றை பாதுகாப்பது தண்ணீரை விரையம் இல்லாமல் பேணுவது என்கின்ற விசயம் குறித்த பாரிய விழிப்பை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த முயற்சியை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம் இதன் ஊடாக மாணவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளும் இந்த விடயத்தில் புதிய ஊக்கத்தோடும் புதிய அணுகுமுறையோடும். புதிய கண்டு பிடிப்புக்களோடும் திறமையை வெளிப்படுத்துகின்ற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை கௌரவித்தல் பரிசு வழங்குதல் போன்ற பலவிதமான பயிற்சிகளைச் செய்யலாம் என நாங்கள் திட்டமிட்டுள்ளோம். சுரியான திட்டமிடலைச் செய்ய வேண்டும். இது தொடர்பாக பல கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். எங்கள் அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து குழுக்களின் ஊடாக திட்டமிடலைச் செய்து மாணர் சமுதாயத்தை அறிவுறுத்தல் செய்வதற்கு தயராகிக் கொண்டு இருக்கின்றோம்
இந்தச் சிறுவர் தின நன்நாளில் நீங்கள் வளர்ந்து பெரியவர்களாகி இன்னுமொரு பரம்பரையினருக்கு நீங்கள் விட்டுச் செல்கின்ற மிகப் பெரிய கொடையாக பரிசாக இன்று இணைகின்ற இந்த அமைப்பு ஏற்படுத்தும் விழிப்புணர்வின் தாக்கம் சமூகத்தில் நிலைத்து நிற்கப் போகிறது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன ஈ மற்றும் அமைச்சின் அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளழிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் கலந்து கொண்ட மாணவர் மாணவிகளுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.






