(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவராக நியமனம் பெற்றுள்ளார். கொழும்பில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுதீனால் இந் நியமனம் வழங்கப்பட்டது.
அடுத்த வாரம் இவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.


