ஜாமியதுல் பலாஹ் அதிபர் அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் ஜனாஸா செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைகிறேன். -அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்

Written By avathani Media Network on Thursday, October 13, 2016

(இக்பால் அலி)

இஸ்லாமிய ஆன்மிக வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பைச் செய்த காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அதிபர் அஸ்ஸெய்க் எம். ஏ. அப்துல்லாஹ் ரஹ்மானி ஜனாஸா செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கமும் கவலையும் அடைந்துள்ளதோடு அந்னாரது மரணம் எமது முஸ்லிம் சமுதாயத்திற்கு பாரிய இழப்பாகும் எனவும் அவருடைய ஜனாஸாவுக்காக இந்த நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் பிரார்த்தனை புரியமாறு முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அதிபர் அஸ்ஸெய்க் எம். ஏ. அப்துல்லாஹ் ரஹ்மானி வபாத்தான செய்தி தொடர்பாக முஸ்லிம் மக்களும் பிரார்த்தனை புரியமாறு முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

தென்னிந்திய தஞ்சை மாவட்டத்தில் அதிகாரம் பட்டினத்தில் பிறந்தவர். ஆன்மிக் பணிக்காக தம் தந்தை சகிதம் 03-05-1958 ஆம் ஆண்டு இலங்கை வந்தவர் அட்டாளச்சேனை அரபுக் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றினார். பின்னர் 05-01-1955 இல் ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். இவ்வாறு அரபுக் கல்லூரிகளிலும், பள்ளிவாசல்களிலும், பள்ளிவாசல்கள் உருவாக்கத்திலும் அவர் இஸ்லாமிய சமய ரீதியாக ஆற்றிய பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்தியாவைப் பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கைக்குரிய ஸைகுல் பலாஹ் எம். ஏ. அப்துல்லாஹ் ரஹ்மானியின் குடும்பத்தினருக்கும் அவர் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் துக்கத்தையும் தெரிவிப்பதோடு அவருடைய ஜனாஸாவுக்காக இந்த நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்தனை புரிய வேண்டும் தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.