காத்தான்குடி சம்மேளனத்தின் மாணவ ஒழுக்க விழுமிய மேம்பாட்டுக்குழு ஆரம்பம்.

Written By avathani Media Network on Wednesday, October 12, 2016

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளனத்தின் கல்விக்குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி கோட்ட பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் ஒழுக்க விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்காலத்தில் முறையாக கையாளும் நோக்குடன் ஒழுக்க விழுமிய மேம்பாட்டுக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக (11.10.2016 செவ்வாய்) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது காத்தான்குடி சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய் ஏ.சீ.எம்.ஸபீல்(நழீமி) தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கின்ற போது அதனால் எற்படுகின்ற மாணவர்களின் தவறான புரிந்துகொள்ளல் காரணமாக பிரச்சினைகள் எழுகின்றன. இவ்வாறான நிலை ஏற்படுகின்ற போது ஆசிரியர் சமூகம் கற்பித்தல் உட்பட பல பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படுவதனை நாமறிவோம். மாத்திரமின்றி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்ற போது ஊடகங்களும் விடயங்களை பெரிது படுத்தி தீர விசாரிக்காமல் எழுதுவதனைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மாணவ ஒழுக்க விழுமிய மேம்பாட்டுக்குழுவின் மூலமாக எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் இதன் போது தெரிவித்தனர். 

தெரிவு செய்யப்பட்ட குழு உறுப்பினர்கள்.

1. அல்ஹாஜ். எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் (பிரதேச கல்வி பணிப்பாளர்)

2. அல்ஹாஜ். எம்.ஏ.எம்.தௌபீக் (தலைவர் காத்தான்குடி ப.மு.நி.சம்மேளனம்)

3. அல்ஹாஜ். ஏ.எல்.ஏ.அப்துல்ஜவாத் (பிரதி தலைவர் ப.மு.நி.சம்மேளனம்)

4. அஷ்ஷெய். ஏ.எல்.எம்.ஸபீல்(நழீமி) (செயலாளர் ப.மு.நி.சம்மேளனம்)

5. அஷ்ஷெய். எம்.சீ.எம்.றிழ்வான்(மதனி) (செயலாளர் கா.ஜம்இய்யதுல் உலமா)

6. அல்ஹாஜ். என்.எம்.எம்.பரீட்(ஆசிரியர் ஆலோசகர் மட்-மத்தி )

7. அல்ஹாஜ். எம்.சீ.எம்.ஏ.சத்தார்(அதிபர் மீராபாலிகா)

8. அல்ஹாஜ். எம்.ஐ.எம்.சுபைர்(கா.தளவைத்தியசாலை அ.குழு உறுப்பினர்)

மேற்படி சந்திப்பின் போது சம்மேளனத்தின் தலைவர்,பிரதி தலைவர்,செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.