(பைஸர் அமான்)
BCAS மட்டக்களப்பு வளாகம் காத்தான்குடி நகரசபை மற்றும் சமுக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட வளவாளர் M.L.M. மக்சூட் அவர்களின் “Exam Techniques & Memory Development” எனும் கருத்தரங்கு கடந்த 29.09.2016 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
சுமார் 850 இற்கும் அதிகமான மாணவர்களின் பங்கு பற்றுதலோடு நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காத்தான்குடி நகர சபையின் செயலாளர் SMM. ஷாபி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்தியிருந்தார்.







