சமூக சன்மார்க்கப் பணியில் 85 வருடங்கள் சேவை செய்யும் முன்னணிமிக்க கலாபீடமான மஹகரம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணம் கோரப்பட்டுள்ளது.
ஷரிஆப் பிரிவுக்கு 15 வயதுக்கு உட்பட்ட தற்போது பாடசாலையில் 8 ஆம் ஆண்டு கற்றுக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்து இருக்க வேண்டும். தமிழ் மொழி சரளமாகத் தெரிந்து இருக்க வேண்டும்.
ஹிப்ழ் பிரிவுக்கு 12 வயதுக்கு உட்பட் தற்போது பாடசாலையில் 5 ஆம் ஆண்டு கற்றுக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.
இரு பிரிவுகளுக்கும் பொதுக் கல்வி போதிக்கப்படும். க. பொ. த. சாதாரண தரம், உயர் தரம் பரீட்சை மற்றும் அல் ஆலிம் , அஹதிய்யா ஆகிய அரசாங்கப் பரீட்சைகளுக்கும் தயார்ப்படுத்தப்படுவர். குணனி மற்றும் உயர்கல்வி வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 18-11-2016 ஆகும் நேர்முகப் பரீட்சை டிசம்பர் 04 ஆம் திகதி மு. ப 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறும்
மேலதிக விபரங்களுக்கு பணிப்பாளர் கபூரிய்யா அரபுக் கல்லூரி, பாமுனுவ வீதி, மஹரகம என்ற முகவரியுடனும், 0777104393, 0772907803 ஆகிய கையடக்கத் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
இக்பால் அலி

