உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச நாடக ஆலோசனைக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் 2016 அரச சிறுவர் நாடக விழாவின் விருது வழங்கல் வைபவம் 2016 ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு மகரகம, ஸ்ரீலங்கா யூத் மண்டபத்தில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களின் தலைமையில் மற்றும் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ பாலித தெவரப்பெரும் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.
2016 அரச சிறுவர் நாடக விழாவின் இறுதிச் சுற்றில் சிங்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் சிறுவர் நாடகங்கள் கடந்த மாதம் மருதானை டவர் ஹோல் மண்டபத்தில் மேடையேற்றப்பட்டன. அவற்றிலிருந்து சிறந்த நாடக நடிகர், சிறந்த நாடக நடிகை, சிறந்த இசையமைப்பு, சிறந்த ஒளியமைப்பு, சிறந்த மேடை முகாமைத்துவம், சிறந்த அரங்க அமைப்பு, சிறந்த ஒப்பனை அலங்காரம், சிறந்த ஆடையலங்காரம் ஆகிய பிரிவுகளுக்கு விருது மற்றும் பணப்பரிசு என்பன வழங்கப்படவுள்ளது.

