தேர்தல் முடிந்த பிற்பாடு நாம் அரசியல் பார்வையிலிருந்து விடுபட வேண்டும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்

Written By avathani Media Network on Tuesday, September 27, 2016


(எம். எச். எம். அன்வர்)

தேர்தல் முடிந்த பிற்பாடு நாம் அரசியல் பார்வையிலிருந்து விடுபட வேண்டும் இவ்வாறு நேற்று 26.09.2016 காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்

20017 இல் காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் மெற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கலந்துரையாடும் நிகழ்வு செயலாளர் எஸ் எம் எம் ஸபி தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்

தேர்தல் காலத்தில் நியமனத்தாக்கல் செய்யும்போது அரசியல்பற்றி ஆளுக்காள் பேசிக்கொள்வோம் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிற்பாடு இவற்றை மறந்து செயற்படவேண்டுமே தவிர தொடர்ந்து நாம் முறண்பட்டுக்கொள்ளக் கூடாது 

மக்களாகிய உங்களின் வரிப்பணத்திலேயே அபிவிருத்தி செய்யப்படுகிறது இதனை கொண்டுவந்து மட்டுமே நாங்கள் செய்கின்றோம் இது எங்கள் பணமல்ல அரசாங்கத்தால் எல்லாருக்கும் சேர்த்தே நிதி வழங்கப்படுகிறது இந்த நிதியின் மூலம் அபிவிருத்தி வேலைக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டுகின்றனர் அது பிழையான நடைமுறையாகும் நான் பள்ளியையோ பாடசாலையை கட்டியபின் எந்த இடத்திலும் எனது பெயரை வைக்க விரும்புவதுமில்லை என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்

அத்துடன் எந்த விடயத்தையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் 2017க்குரிய அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகள் கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக திட்டங்களை இனம்கண்டு தருமாறும் பிரதேசத்தின் குப்பை பிரச்சினையை விரைவாக முடிக்க வேண்டியுள்ளதாகவும் முதலமைச்சர் தனதுரையில் தெரிவித்தார் 

மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் வைத்திய அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜாபிர் சுகாதார வைத்திய அதிகாரி யூ எல் எம் நஸீர்தீன் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் ஏ எம் எம் தௌபீக் நகர சபை உத்தியோகத்தர்கள் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எஸ் எம் எம் முஸ்தபா பலாஹி முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அகமட்லெவ்வை உட்பட கல்விமான்கள் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.