(ஜுனைட்.எம்.பஹ்த்)
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத் திடல் தொழுகை சரியாக காலை 06.15 மணிக்கு காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்னால் அமைந்துள்ள திடலில் பெருநாள் தொழுகையும் அதனைத் தொடர்ந்து குத்பாப் பிரசங்கமும் இடம்பெறும்.
ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தப்படும்.
திடல்தொழுகைக்கு வரும்போது அனைவரும் தங்களது வீட்டில் வுழு செய்துகொண்டு தொழுகைக்கான விரிப்பு ஒன்றினையும் கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஹஜ் பெருநாள் தினமான செப்டம்பர் 12ஆம் திகதி திங்கட் கிழமை அன்று குறித்த நேரமான காலை 6.15 க்கு தொழுகை ஆரம்பிக்கப்படும் . எனவே அனைவரும் குறித்த நேரத்துக்கு முன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்..

